பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நடித்த போது நடிகர் சூர்யாவும் நடிகை ஜோதிகாவும் காதலித்தனர். காக்க காக்க பேரழகன் சில்லுன்னு ஒரு காதல் மாயாவி போன்ற படங்களில் இருவரும் இணைந்து நடித்தனர். அவர்களது காதலுக்கு முதலில் சூர்யாவின் அப்பா நடிரக் சிவக்குமார் சம்மதிக்கவில்லை. ஆனால் பெற்றோர் சம்மதத்துடன்தான் திருமணம் என்ற முடிவில் சூர்யாவும் ஜோதிகாவும் உறுதியாக நின்றனர்.
எங்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்காவிட்டால் கடைசி வரை இப்படியே தனித்தனியாக வாழ்ந்து விடுவோம் என்றும் சூர்யா கண்டிஷன் போட்டதால் சிவகுமார் அவர்களது திருமணத்திற்கு சம்மதித்தார். கடந்த 2006ம் ஆண்டில் சூர்யா ஜோதிகா திருமணம் விமரிசையாக நடந்தது. இந்த தம்பதிக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உள்ளனர். திருமணத்துக்கு பின்பு மீண்டும் நடிக்க ஆரம்பித்த ஜோதிகா இந்தியில் அதிகமாக கவனம் செலுத்துகிறார்.
தனது கணவர் சூர்யாவையும் பாலிவுட்டில் நடிக்க வைக்க திட்டமிட்டு குடும்பத்துடன் மும்பையில் செட்டில் ஆகிவிட்டனர். ஆனால் நடிகர் சிவகுமாருடன் ஜோதிகாவுக்கு சண்டை என்பதால்தான் கணவர் குழந்தைகளுடன் மும்பைக்கு ஜோதிகா போய்விட்டார் என்றும் சிலர் கூறிய நிலையில் இதை திட்டவட்டமாக இருவருமே மறுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் திருமணத்துக்கு பின்பும் நான் சினிமாவில் நடிப்பதற்கு மாமனார் சிவக்குமார் தான் முழு ஆதரவு கொடுத்து வருகிறார் என்றும் ஜோதிகா கூறினார். இந்நிலையில் 3 தினங்களுக்கு முன்பு நடிகர் சிவக்குமார் பேசியது இப்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் அவர் நடிகர் விஜயை மறைமுகமாக தாக்கி பேசியதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது.
சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் சிவக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, ஓட்டல் சாப்பாடு நடிகை மாதிரி. வீட்டு சாப்பாடு மனைவி மாதிரி. வீட்டு சாப்பாடு என்பது நிரந்தரம். ஒரு மாற்றத்திற்காக வேண்டுமானால் ஓட்டலில் சாப்பிடலாமே தவிர எப்போதும் ஓட்டலில் சாப்பிட்டால் உடல்நலம் கெட்டுவிடும். எப்போதுமே வீடு மனைவி குழந்தைகள் தான் முக்கியம். நடிகை முக்கியமல்ல என்கிற ரீதியில் அவர் பேசியிருந்தார்.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ப்ளூ சட்டை மாறன், ஓட்டல் சாப்பாடும் நடிகைகளும் ஒன்றா? அவர்களுக்கு குடும்பம் இல்லையா? பெண்கள் பற்றிய உங்களது பார்வை இவ்வளவு கீழ்த்தரமானதா? நடிகையை திருமணம் செய்த உங்கள் மகன் இந்த கருத்தை ஏற்பாரா? ஏன் இப்படி அடிக்கடி உளறுகிறீர்கள்? திருந்தவே மாட்டீர்களா என்று அந்த பதிவில் ப்ளு சட்டை மாறன் கடுமையாக பேசியிருக்கிறார். அவரது இந்த பதிவு இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.





