- Advertisement -
Homeபொழுதுபோக்குஇரண்டாம் பாகமாக உருவாகும் 96 படம், மீண்டும் விஜய் சேதுபதி, திரிஷாவே நடிப்பார்களா? கதையை ஓகே...

இரண்டாம் பாகமாக உருவாகும் 96 படம், மீண்டும் விஜய் சேதுபதி, திரிஷாவே நடிப்பார்களா? கதையை ஓகே சொல்லியது அவரா? – இயக்குனர் கொடுத்த லேட்டஸ்ட் அப்டேட்

- Advertisement -

தமிழ் சினிமாவில் காதல் படங்களுக்கு எப்போதுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும், பலத்த ஆதரவும் கிடைத்து விடுகிறது. அது 1980 களில் வெளிவந்த காதலர் படமாக இருந்தாலும், இப்போது 2020களில் வெளிவரும் காதல் படமாக இருந்தாலும், ரசிகர்களுக்கு எந்த மாதிரியான காதல் கதை என்றாலும் அதன் மீது ஒரு ஈர்ப்பும், அதிக கவனமும் ஏற்பட்டு அதிக வரவேற்பை தந்து விடுகின்றனர்.

அந்த வகையில் காதல், காதலன், லவ் டுடே, காதலுக்கு மரியாதை, காதல் மன்னன், காதல் கோட்டை, ஆட்டோகிராப், சங்கமம், மின்சார கனவு, பூவே உனக்காக என காதலை மையப்படுத்திய பல படங்கள் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அந்த வகையில் விஜய் சேதுபதி திரிஷா நடித்த 96 படம், கடந்த 2018ம் ஆண்டில் வெளியானது. தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான காதல் படமாக 96 படம் கொண்டாடப்படுகிறது. இதில் விஜய் சேதுபதி திரிஷா ஆகியோரின் நடிப்பு வேற லெவலில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக, அவர்களுக்குள் பள்ளி கால நட்பும், காதலும் அந்த பக்குவமும் மிகவும் ரசிக்க வைத்தது.

96 படத்தை இரண்டாம் பாகமாக மீண்டும் உருவாக்க வேண்டும் என்று ரசிகர்கள் பலமுறை கோரிக்கை விடுத்து வந்த நிலையில், 96 படத்தின் இயக்குனர் பிரேம்குமார் இப்போது அதற்கான பணிகளை துவங்கி இருக்கிறார். 96 படத்தில் நடித்த விஜய் சேதுபதி, திரிஷா மீண்டும் 2ம் பாகத்தில் நடித்தால்தான் அந்த படம் இன்னும் அதிக வரவேற்பை பெற வாய்ப்புள்ளது.

- Advertisement -

இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய படத்தின் இயக்குனர் பிரேம் குமார், கடந்த 2018ம் ஆண்டில் 96 படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று வசூலையும் குவித்தது. 96 படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்த நிலையில், நான் இரண்டாம் பாகத்தின் கதையை எழுதி முடித்து விட்டேன் என்று அவர் கூறியிருக்கிறார்.

மேலும் அவர் கூறுகையில், என்னை மிகவும் உற்சாகப்படுத்திய படம் 96. இந்த படத்தின் கதையை நடிகர் விஜய் சேதுபதி மனைவியிடம் சொன்னேன். அவருக்கும் பிடித்திருந்தது. இதையடுத்து தான் எனக்கு இந்த படத்தை 2ம் பாகமாக உருவாக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. விஜய் சேதுபதி மற்றும் திரிஷா ஆகியோரின் தேதிகளின் அடிப்படையில் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்று 96 பட இயக்குனர் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

சற்று முன்