- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகர் என்ற அந்தஸ்தை பெறுகிறாரா விஜய்... கடைசி படத்திற்காக அவர்...

இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும் நடிகர் என்ற அந்தஸ்தை பெறுகிறாரா விஜய்… கடைசி படத்திற்காக அவர் வாங்கப் போகும் ஊதியம் மட்டும் இவ்வளவு கோடியா… அடேங்கப்பா…

- Advertisement -

தளபதி விஜய் தமிழ் தமிழ் சினிமா மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியா சினிமா மார்க்கெட்டிலும் சிம்ம சொப்பனமாக விளங்கி வருகிறார். அவரது திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றாலும் அது எந்த சமயத்திலும் கல்லா கட்ட தவறியதில்லை.

 

இதற்கு மிக முக்கிய காரணம் விஜயை, குழந்தைகள் முதல் பெரியோர் வரை அனைத்து தரப்பினருக்கும் பிடிப்பது தான். அவரது திரைப்படங்கள் விமர்சன ரீதியாக பின்னடைவு அடைந்தாலும், அதனை பலரும் குடும்பம் குடும்பமாக சென்று பார்ப்பதை தவற விடுவதில்லை.

 

இதன் காரணமாகவே அவர் தயாரிப்பாளர்களுக்கு மிக விரும்பிய நடிகராக இருக்கிறார். மற்றொரு முக்கிய காரணம் தயாரிப்பாளர்களுக்கு சொன்ன தேதியில் அவர் படத்தை முடித்துக் கொடுப்பதுதான். படத்தைத் தள்ளிப் போடும் எந்த ஒரு விஷயத்தையும் அவர் இதுவரை செய்ததே இல்லை. மிகவும் அர்ப்பணிப்போடு அவர் பணியாற்றி வருவதால் விஜய் இன்று சினிமா மார்க்கெட்டில் நம்பர் ஒன் நடிகராக இருக்கிறார்.

 

இப்படியான சூழலில் தான், சினிமா உலகை விட்டு விட்டு அரசியல் இறங்கப் போவதாக அறிவித்திருக்கிறார். இது ஒரு பக்கம் மகிழ்ச்சியை கொடுத்தாலும், அவர் திரையுலகை விட்டு வெளியேறுவதாக கூறியது அவரது ரசிகர்களின் மனதில் இடியை இறக்கியது.

 

அரசியலில் இருந்து கொண்டே அவர் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். இது தொடர்பாக இணையத்திலும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தனது இறுதித் திரைப்படமான 69 வது படத்தில் கவனம் செலுத்த இருக்கிறார் விஜய். எச் வினோத் தான் இந்த திரைப்படத்தை இயக்குகிறார்.

 

தெலுங்கு மற்றும் கன்னட திரை உலகில் முன்னணி தயாரிப்பு நிறுவனமான கேவிபி நிறுவனம் இந்த படத்தின் மூலம், தமிழ் சினிமாவில் கால் பதிக்கிறது. இதற்காக, விஜய் 275 கோடி ரூபாய் சம்பளம் வாங்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்னதாக ஷாருக்கான் ஒரு திரைப்படத்திற்கு 250 கோடி ரூபாய் ஊதியம் பெற்றார். தற்போது, அவரை விஜய் முந்தி இருப்பதாகவும், இதன் மூலம் இந்திய திரையுலகிலேயே விஜய் தான் அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையை பேசியிருப்பதாகவும் சினிமா விமர்சகர்கள் கூறி வருகிறார்கள்.

 

சற்று முன்