நடிகர் அஜித்குமார் நடிப்பில் விடா முயற்சி படப்பிடிப்பு கடந்த ஓராண்டாக நடந்து முடிந்துள்ளது. இந்த படம் தீபாவளிக்கு வெளிவரும் என்று கூறப்பட்டாலும், இன்னும் அது உறுதி செய்யப்படவில்லை. இன்னும் அஜித் குமாரும் திரிஷாவும் நடிக்க வேண்டிய ஒரு பாடல் காட்சி பாக்கி இருப்பதாக சொல்லப்படுகிறது.அந்த பாடல் காட்சி வருகிற அக்டோபர் 3ம் தேதி முதல் 7ம் தேதி வரை ஸ்பெயின் நாட்டில் படப்பிடிப்பு நடத்த உள்ளதாக தகவல் உள்ளது.
அத்துடன் விடாமுயற்சி படத்துக்காக இதுவரை எடுக்கப்பட்ட அனைத்து காட்சிகளும் எடிட் செய்யப்பட்டு தயார் நிலையில் உள்ளதாகவும், அந்த ஒரு பாடல் காட்சி எடுத்தவுடன் படம் ரிலீஸ்க்கு முழுமையாக தயாராகிவிடும். அதனால் கண்டிப்பாக தீபாவளிக்கு விடாமுயற்சி படத்தை எதிர்பார்க்கலாம் என்றும் ஒரு தகவல் பரவி வருகிறது.எனினும் படத்தை தயாரித்துள்ள லைகா புரடக்சன்ஸ் நிறுவனம், படத்தின் இயக்குனர் மகிழ்திருமேனி ஆகியோர் தரப்பிலிருந்து இன்னும் உறுதியான அறிவிப்பு அதிகாரபூர்வமாக வெளியாகவில்லை.
இந்நிலையில் நடிகர் அஜித்குமார் கடந்த மார்ச் மாதம் முதல் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அட்லி படத்தின் படப்பிடிப்பில் பங்கேற்று வருகிறார். இப்போது ஐதராபாத்தில் இரண்டு கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்த நிலையில், அடுத்ததாக 3ம் கட்ட படப்பிடிப்பு ஸ்பெயின் நாட்டில் துவங்க இருக்கிறது. ஏறக்குறைய வெளிநாட்டில் தான் இந்த படத்தின் காட்சிகள் படம்பிடிக்கப்பட உள்ளது.
ஏனெனில் குட் பேட் அக்லி படத்தின் கதைக்களமே வெளிநாடுகளில் நடப்பது போல் தான் இந்த படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் விரைவில் ஸ்பெயின் நாட்டில் படப்பிடிப்பு துவங்க உள்ளது. இதற்காக அஜித்குமார், ஆதிக ரவிச்சந்திரன், படத்தின் கதாநாயகி திரிஷா உள்ளிட்ட படக் குழுவினர் சில தினங்களில் ஸ்பெயின் நாட்டுக்கு செல்ல உள்ளனர். அங்கு 70 நாட்கள் தொடர்ந்து ஷூட்டிங் நடத்தப்பட இருக்கிறது.
ஐதராபாத்தில் ஏற்கனவே இரண்டு கட்ட படப்பிடிப்புகள் முடிவடைந்துள்ள நிலையில், அங்கு 70 நாட்கள் என இரண்டு மாதங்களுக்கு மேலாக ஷூட்டிங் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. அதனால் ஏறக்குறைய படப்பிடிப்பு அங்கேயே முடிந்துவிடும் அளவிற்கு சூட்டிங் முழுமையாக எடுக்கப்பட்டு விடும் என்று தெரிகிறது.
ஸ்பெயின் நாட்டில் 70 நாட்களுக்கு தொடர்ந்து சூட்டிங் நடந்தால், படத்தை முழுமையாக முடித்து விடும் திட்டத்தில் தான் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட படக் குழுவினர் செல்ல வாய்ப்பு இருப்பதாக தகவல் தெரிய வந்துள்ளது. ஸ்பெயின் நாட்டுக்கு செல்லும் படக்குழுவினர் அங்கு சண்டைக் காட்சிகள் மற்றும் சில பாடல் காட்சிகளை படமாக்க உள்ளதாக தெரிகிறது. இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





