- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்த கம்பி கட்டற வேலை எல்லாம் எங்ககிட்ட வேணாம், டைரக்டர் வெங்கட்பிரபுவை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள்...

இந்த கம்பி கட்டற வேலை எல்லாம் எங்ககிட்ட வேணாம், டைரக்டர் வெங்கட்பிரபுவை கலாய்த்து தள்ளும் ரசிகர்கள் – தி கோட் படம் குறித்து அப்படி சொல்லலாமா?

- Advertisement -

டைரக்டர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 5ம் தேதி தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படம் ரிலீஸ் ஆனது. படம் ரிலீஸ் ஆகி 10 நாட்கள் கடந்த நிலையில் இதுவரை உலகம் முழுவதும் 350 கோடி ரூபாய்க்கு மேல் தி கோட் படம் வசூலித்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 150 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்துள்ளது.

எனினும் தி கோட் படம் குறித்து கலவையான விமர்சனங்களை இன்னும் நீடித்து வருகின்றன. வழக்கமான விஜய் படமாக இருந்தாலும் நிறைய விஷயங்களில் இயக்குனர் வெங்கட் பிரபு ஏமாற்றம் தந்துவிட்டார் என்ற விமர்சனமே எழுந்துள்ளது. லியோ படத்தில் நரபலி, இரட்டைப் பிறவி போன்ற மூடநம்பிக்கை விஷயங்கள் இருந்ததால், அந்த படம் கடுமையான விமர்சனத்தில் சிக்கியது.

எனினும் வசூல் ரீதியாக உலகம் முழுவதும் 650 கோடி ரூபாய்க்கு மேல் படம் வசூலித்தது. ஆனால் வெங்கட் பிரபு ஆரம்பத்திலிருந்து தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படம் குறித்து பலவிதமான அப்டேட்களை கொடுத்து, பில்டப் செய்து வந்த நிலையில், படம் அந்த அளவுக்கு ரசிகர்களை திருப்தி படுத்தவில்லை என்பதே உண்மை.

குறிப்பாக விஜய் படம் என்றாலே அதில் முதலில் பெரிய அளவில் ரசிகர்களை கவர்வது பாடல்களும் இசையும்தான். அந்த விதத்தில் யுவன் சங்கர் ராஜா பலத்த ஏமாற்றத்தை தந்தார் என்றால் அது மிகையல்ல. அவர் இசையில் ஒவ்வொரு சிங்கிள் வெளியாகும் போதும் ரசிகர்களுக்கு அதிருப்தியும் ஏமாற்றமுமே ஏற்பட்டது.

இந்த சூழ்நிலையில் படத்தில் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளத்தை படத்தில் நடிக்க வைத்தும், தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தியும் மாயாஜால விஷயங்களை காட்டியும் தி கோட் படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்பதே உண்மை. எனினும் படத்தில் நடிகர் விஜய்யின் நடிப்பு குறிப்பாக மகன் விஜய் நடிப்பு வில்லத்தனமான நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெற்றது. இந்த படம் 10 நாட்கள் கடந்தும் திரையில் ஓடிக்கொண்டிருக்க முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணல் பேசிய வெங்கட் பிரபு, இன்னும் எனக்கு இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கால அவகாசம் இருந்திருந்தால் இன்னும் இந்த படத்தை 30 முதல் 40 சதவீதம் மெருகேற்றி சிறப்பாக கொண்டு வந்திருப்பேன். எனக்கு போதிய கால அவகாசம் கிடைக்கவில்லை என்று கூறி இருக்கிறார். கடந்தாண்டு அக்டோபர் மாதம் துவங்கிய படம் இந்தாண்டு செப்டம்பர் மாதம்தான் வெளிவந்திருக்கிறது. இந்த கம்பி கட்டற வேலையெல்லாம் எங்ககிட்ட வேண்டாம் என்று ரசிகர்கள், வெங்கட் பிரபுவை கலாய்த்து வருகின்றனர்.

சற்று முன்