- Advertisement -
Homeபொழுதுபோக்குநண்பர் ரஜினிக்காக அப்படி ஒரு விஷயத்தை செய்ய நடிகர் கமல் முன்வருவாரா? - சினிமா பிரபலம்...

நண்பர் ரஜினிக்காக அப்படி ஒரு விஷயத்தை செய்ய நடிகர் கமல் முன்வருவாரா? – சினிமா பிரபலம் சொன்ன முக்கிய தகவல், போட்றா வெடிய!

- Advertisement -

தமிழ் சினிமாவில் நடிகர்கள் கமல்ஹாசன், ரஜினிகாந்த் இருவரும் மிகவும் நெருக்கமான நண்பர்கள் என்பது பலரும் அறிந்த உண்மைதான். கடந்த 1980களில் தொடங்கி இன்றுவரை ரஜினியும் கமலும் இணைபிரியாத நண்பர்களாக இருக்கின்றனர். உடன்பிறவா சகோதரர்கள் என்று சொல்லும் அளவுக்கு ரஜினி மீது கமலும், கமல் மீது ரஜினியும் நெருக்கமான அன்பும் பாசமும் கொண்டிருக்கின்றனர் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மை.

நடிப்பு துறையில் நடிகர்களாக, அவர்கள் தொழில் போட்டியாளர்களாக இருந்தாலும் ரஜினி பட விழாவில் கமல்ஹாசன் பங்கேற்று ரஜினியின் நடிப்பை புகழ்ந்து பேசுவார். அதேபோல் கமல் பட விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துகொண்டு கமலின் நடிப்பை வெகுவாக பாராட்டுவார். இது பல ஆண்டுகளாக நடந்து வருகிறது.

- Advertisement -

துவக்கத்தில் ரஜினியும் கமலும் ஒன்றாக இணைந்து நடித்த பல படங்கள் பெரிய அளவில் வெற்றி பெற்றன. ஆனால் இவர்களது சம்பளம் அதே நிலையில் இருந்தது. தயாரிப்பாளர்கள் பல லட்சங்கள் கூடுதலாக வருமானம் ஈட்டிய நிலையில், இனிமேல் இருவரும் சேர்ந்து நடிக்க வேண்டாம், தனித்தனியாக நடித்தால் தான் இருவரும் தனிப்பட்ட வளர்ச்சியை அடைய முடியும் என்று ஒன்றுகலந்து பேசி முடிவு செய்தனர். அதன்பிறகு 40 ஆண்டுகளாக ரஜினி, கமல் இருவரும் தனித்தனியாக நடித்தனர். இப்போது இரு சிகரங்களாக தமிழ் சினிமாவில் உயர்ந்து நிற்கின்றனர்..

நடிகர் ரஜினிகாந்த் படங்களில் எப்போதுமே ஓப்பனிங் சாங் என்பது பெரிய அளவில் ரசிகர்களின் மனதை கவரும். குறிப்பாக அண்ணாமலை படத்தில் வந்தேன்டா பால்காரன், முத்து படத்தில் இடம்பெற்ற ஒருவன் ஒருவன் முதலாளி, முரட்டுக்காளை படத்தில் இடம்பெற்ற பொதுவாக என் மனசு தங்கம், அருணாச்சலம் படத்தில் இடம்பெற்ற அதாண்டா இதாண்டா அருணாச்சலம் நாந்தாண்டா என ரஜினியின் படத்தில் ஓப்பனிங் சாங் என்பது மிகப்பெரிய அளவில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் படங்களில் பெரும்பாலும் ஓபனிங் சாங் பாடியது பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம்தான். ஆனால் கடைசியாக அவர் அண்ணாத்த படத்துக்கு ரஜினிக்கு ஓபனிங் சாங் பாடினார். அதற்கு பிறகு கொரோனா நோய் பாதிப்பில் எஸ்பிபி மறைந்து விட்டார். அதனால் அவரது மறைவுக்கு பிறகு எஸ்பிபி குரலில் ரஜினியின் ஓபனிங் சாங் ஒலிக்காதது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை தந்து வருகிறது. நடிகர் ரஜினிகாந்துக்கு வரப்போகும் படங்களில் நடிகர் கமலஹாசன் ஓபனிங் சாங் பாட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் கூறுகையில், ரஜினி படத்தில் ஓபனிங் சாங் பாட வேண்டும் என்று அந்த படத்தின் இயக்குனரோ தயாரிப்பாளரோ கமலிடம் கேட்டால் எந்தவிதமான தயக்கும் இன்றி கமல் நிச்சயமாக ஒப்புக்கொண்டு பாடுவார். ஏனென்றால் ரஜினி, கமல் நட்பு அப்படிப்பட்டது என்று அவர் வெளிப்படையாக கூறியிருக்கிறார். வரும் படங்களில் ரஜினியின் ஓபனிங் சாங் கண்டிப்பாக ரஜினிக்காக கமல்ஹாசன் பாடுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

சற்று முன்