- Advertisement -
Homeபொழுதுபோக்குதலைவர் கிட்ட இப்போ இருக்கறது ரெண்டே ரெண்டு உருட்டுதான், ஒண்ணு அது, ஒண்ணு இது -...

தலைவர் கிட்ட இப்போ இருக்கறது ரெண்டே ரெண்டு உருட்டுதான், ஒண்ணு அது, ஒண்ணு இது – நடிகர் ரஜினியை விளாசித் தள்ளிய பிரபலம்!

- Advertisement -

சினிமாவில் நடிப்பவர்கள் குறிப்பிட்ட காலத்துக்கு பிறகு பணம், பெயர், புகழ் சம்பாதித்து உச்சத்துக்கு வந்த பிறகு சினிமாவை விட்டு விலகி விடுவது தான் உத்தமமான காரியமாக இருக்கும். ஒரு கட்டத்துக்கு பிறகு ஏதேனும் ஒரு சில படங்களில் முக்கியமான கேரக்டர்களில் அல்லது கேமியோ ரோல்களில், கௌரவத் தோற்றங்களில், சிறப்பு தோற்றங்களில் நடித்துவிட்டு சென்றுவிடலாம்.

ஆனால் தமிழ் சினிமாவில் அப்படி யாருமே இருக்க எந்த நடிகர்களும் முன் வருவதில்லை. குறிப்பாக 70 வயது கடந்தாலும் இன்னும் சினிமாவில் நடித்துக் கொண்டே தான் இருப்பேன். அதுவும் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று அடம்பிடிப்பவர்களாகத்தான் நடிகர்கள் இருந்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் அவர்களுக்கு இருக்கும் பணத்தாசை தான். திரும்பத் திரும்ப சினிமாவில் நடிக்க வேண்டும், சம்பாதிக்க வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருக்கிறதே தவிர ரசிகர்களுக்கு கலைச் சேவை செய்யும் எண்ணமெல்லாம் எதுவும் அவர்களுக்கு கிடையாது என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

- Advertisement -

அதிலும் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் போன்றவர்கள் எல்லாம் நடிப்பில், புகழில் நிறைய எல்லைகளை தொட்டுவிட்டார்கள். இனிமேல் அவர்கள் நடிப்பதை தவிர்த்து விட்டு, இளையவர்களுக்கு வழி விட்டு ஒதுங்கிக் கொள்ளலாம். ஆனால் இப்போதும் 150 கோடி, 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு நடிப்பதில் குறியாக இருந்து வருகிறார்கள்.

நடிகர் ரஜினிகாந்துக்கு நடிப்பதற்கு கேரக்டரே கிடைப்பது இல்லை. அதனால் அவர் ரசிகர்களிடம் மாஸ் காட்டும் கேரக்டரை மட்டுமே தேர்வு செய்து நடிக்கிறாரே தவிர, மற்ற நடிகர்களை போல் குணச்சித்திர கதாபாத்திரங்களில் ரஜினிகாந்த் நடிப்பதில்லை. ரஜினி அப்படி நடித்தால் ரசிகர்களும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஏனெனில் ரசிகர்களை அப்படி பழக்கி வைத்துள்ளனர்.

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்திடம் வேட்டையன் மற்றும் கூலி ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே கைவசம் உள்ளன. வேட்டையன் படம் வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் ஆகிறது. அடுத்து கூலி படத்தில் ரஜினி நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில் ரஜினி நடிக்க உள்ளார். இந்நிலையில் சினிமா விமர்சகர் ப்ளு சட்டை மாறன், நடிகர் ரஜினிகாந்தை கிண்டலடித்து வெளியிட்டுள்ள பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

ப்ளு சட்டை மாறன் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தலைவர் ரெண்டே ரெண்டு கேரக்டரை தான் அடிக்கடி உருட்டிட்டு இருக்கிறார். தர்பார், ஜெயிலர் படங்களில் டெரர் போலீஸ் கேரக்டர், காலா, கபாலி, கூலி, படங்களில் டெரர் தாதா கேரக்டர். அதாவது ரஜினி டெரர் போலீசாக நடிக்கிறார். இல்லையென்றால் டெரர் தாதாவாக நடிக்கிறார். இந்த ரெண்டே ரெண்டு உருட்டை வைத்து தான் காலம் தள்ளுகிறார். மேலும் வேட்டையன் படத்தில் பிரகாஷ்ராஜ், அமிதாப்பச்சனுக்கு பின்னணி குரல் கொடுத்திருப்பது செம காமெடியான விஷயம் என்றும் ப்ளு சட்டை மாறன் கலாய்த்து உள்ளார். இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்