நடிகர் சிம்பு மாநாடு திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார். கொரோனா சமயத்தில் பலரும் வீடுகளில் முடங்கியிருந்த போது, திரையரங்குகளில் கூட்டம் வராமல் இருந்தது. இவரை உடைத்து காட்டியது மாநாடு திரைப்படம். படம் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டிருந்ததால் ரசிகர்கள் அதற்கு பச்சை கொடி காட்டினர்.
மங்காத்தா திரைப்படத்தை தொடர்ந்து மிகப் பெரிய பிளாக்பஸ்டர் ஹிட்டை வெங்கட் பிரபு கொடுத்திருந்தார். இதனைத் தொடர்ந்து சிம்பு நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை ருசித்தது. இயக்குனர் கௌதம் மேனனும் நீண்ட நாட்களுக்குப் பிறகு தனது வெற்றியை பதிவு செய்திருந்தார்.
திருச்செந்தூர் பகுதியில் இருந்து வறுமையில் வாடும் ஒரு இளைஞன் மும்பைக்கு சென்று எப்படி தாதாவாகிறான் என்ற ஒரு சிங்கிள் கான்செப்ட்டை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து சிம்பு நடித்த பத்து தல திரைப்படம் அந்த அளவுக்கு வரவேற்பை வரவில்லை.
தொடர்ந்து, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் இயக்குனர் தேசிங்கு பெரியசாமியுடன் சிம்பு இணைந்தார். ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிப்பதாக இருந்தது. வரலாற்று பின்னணியில் சிம்பு இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் தொடங்கிய நிலையில், திடீரென அது நிறுத்தப்பட்டது.
சிம்புவோ மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைப் திரைப்படத்தில் நடிக்க சென்றார். முதலில் கமல்ஹாசன் உடன் துல்கர் சல்மான் தான் இந்த படத்தில் இணைந்து நடிப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் துல்கர் படத்திலிருந்து விலகியதால் அவர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்தார்.
இதன் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கும் சூழலில் தற்போது சிம்பு அடுத்ததாக, இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்துடன் இணைய இருக்கிறார். ஓ மை கடவுளே திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான அஸ்வந்த் மாரிமுத்து, தற்போது பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் படத்தை எடுத்து வருகிறார். இதன்பிறகு இந்த கூட்டணி இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





