- Advertisement -
Homeபொழுதுபோக்குபிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல காமெடி நடிகரின் மகன் பங்கேற்க வாய்ப்பு, வெளியான லேட்டஸ்ட் தகவல் -...

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிரபல காமெடி நடிகரின் மகன் பங்கேற்க வாய்ப்பு, வெளியான லேட்டஸ்ட் தகவல் – அப்போ பார்வையாளர்கள் வரவேற்பு அவருக்கு அமோகமா இருக்குமே?

- Advertisement -

விஜய் டிவியில் கடந்த 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சி பார்வையாளர்களின் பெரிய ஆதரவு பெற்ற ரியாலிடி ஷோவாக நடந்து வருகிறது. 100 நாட்களுக்கு மேல் பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் போட்டியாளர்கள், டாஸ்க்குகளில் வெற்றி பெற்று, பார்வையாளர்களின் அமோக ஆதரவு பெற்ற போட்டியாளர் இறுதியில் டைட்டில் வின்னராக அறிவிக்கப்படுகின்றனர்.

கடந்த 7 ஆண்டுகளில் ஆரவ், ஆரி, முகில், ரித்விகா, அசீம், ராஜூ, கடந்த சீசனில் ராஜா ராணி சீரியல் நடிகை அர்ச்சனா ஆகிய 7 பேர் டைட்டில் வின்னராக வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்த முறை பிக்பாஸ் சீசன் 8 வருகிற அக்டோபர் மாதம் 6ம் தேதி மாலை 6 மணிக்கு துவங்குகிறது.

- Advertisement -

இந்த முறை நடிகர் கமல்ஹாசனுக்கு பதிலாக, நடிகர் விஜய் சேதுபதி பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பங்கேற்க இருக்கிறார். ஏனெனில் நடிகர் கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இனி பங்கேற்க முடியாது என ஏற்கனவே அறிவித்த நிலையில், அவருக்கு பதிலாக விஜய் சேதுபதி நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ரூ. 50 கோடி சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக பங்கேற்க போகிறவர்கள் யார் என்று தகவல் சில நாட்களாக வெளியாகி வருகிறது. இதில் குறிப்பாக நடிகர்கள் செந்தில், ரஞ்சித், ஜெகன், ரியாஸ்கான், நடிகை ஜாக்குலின், டிடிஎப் வாசன் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இன்னும் இந்த தகவல் உறுதியாகவில்லை.

- Advertisement -

பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் 8 போட்டியின் துவக்க நாள் நிகழ்ச்சி வரும் அக்டோபர் 6ம் தேதி மாலை 6 மணிக்கு நடக்கிறது. அப்போதுதான் போட்டியாளர்களை, நிகழ்ச்சி தொகுப்பாளராக விஜய் சேதுபதி அறிமுகப்படுத்தி, வீட்டுக்குள் அனுப்புவார். அதுதான் இறுதியான பிக்பாஸ் போட்டியாளர்களின் அறிவிப்பாக இருக்கும். அதுவரை வரும் தகவல்களை உறுதிப்படுத்த முடியாது.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சி 8வது சீசனில் பிரபல காமெடி நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் மயில்சாமிக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பும், மரியாதையும் உள்ளது. ஏனெனில் மயில்சாமி காமெடி நடிகராக மட்டுமின்றி, நல்ல பண்புள்ள மனிதராக பலருக்கும் உதவியவர். சென்னையில் மழைக்காலத்தில் வீடு வீடாகச் சென்று பல உதவிகளை ஏழை மக்களுக்கு செய்தவர். அதனால் அவரது மகன் அன்புவுக்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் நல்ல வரவேற்பும், ஆதரவும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்