- Advertisement -
Homeபொழுதுபோக்குரஜினிகாந்த் நடித்த 3 படங்களின் டைட்டில்களை தட்டித் தூக்கிய பிரபல கன்னட நடிகர் - இந்த...

ரஜினிகாந்த் நடித்த 3 படங்களின் டைட்டில்களை தட்டித் தூக்கிய பிரபல கன்னட நடிகர் – இந்த ஐடியா தமிழில் யாருக்குமே தோணலையா? – கடுப்பான ரசிகர்கள்!

- Advertisement -

ஒரு படத்துக்கு டைட்டில் என்பது மிகப்பெரிய அளவில் ரசிகர்களின் மத்தியில் பேசப்படும் பிரபலமான பெயராக இருக்க வேண்டும். ஆரம்பத்திலிருந்து இப்படி படத்துக்கு தலைப்பு வைப்பதில் எம்ஜிஆர் முதல் ரஜினி, கமல் வரை, இன்றுள்ள விஜய், அஜீத்குமார் வரை அதில் மிகவும் கவனமும் அக்கறையும் எடுத்துக் கொள்வார்கள்.

அதனால் எப்போதும் படத்துக்கு டைட்டில் என்பது மாஸாக இருப்பது அதுவே படத்துக்கு மிகப்பெரிய ஒரு வரவேற்பை, ரசிகர்களிடம் பெற்றுத் தந்து விடுகிறது. அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த பல படங்களின் பெயர்கள் மாஸாக இருக்கும். ரஜினி நடித்த பல வெற்றி படங்களின் பெயர்கள் இப்போதும் அந்த படத்திற்கும், ரஜினிக்கும் கெத்து சேர்ப்பதாக இருக்கிறது.

- Advertisement -

அதனால் ரஜினியின் பல வெற்றி படங்களின் பெயர்கள் இப்போது புதிய படங்களுக்கு டை்டில் ஆக வைக்கப்பட்டு வருகின்றன. தற்போது கன்னட படம் ஒன்றுக்கு ரஜினியின் மூன்று படங்களின் டைட்டிலாக வைக்கப்பட்டுள்ளது. கிச்சா சுதீப் நடிக்கும் புதிய படத்திற்கு பில்லா ரங்கா பாட்ஷா என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தை அனூப் பண்டாரி இயக்குகிறார். அனுமான் படத்தின் தயாரிப்பாளர்கள் கே நிரஞ்சன் ரெட்டி மற்றும் சைதன்யா ரெட்டி ஆகியோர் பிரைம் ஷோ என்டர்டெயின்மென்ட் சார்பில் இந்த படத்தை தயாரிக்கின்றனர். இந்த படம் வருகிற 2209 ஆம் ஆண்டு நடப்பது போன்ற சயின்ஸ் பிக்சன் கதை என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

பெரிய பட்ஜெட்டில் பான் இந்தியா படமாக இது தயாராகிறது. பில்லா ரங்கா பாட்ஷா படம் குறித்து இயக்குனர் அனூப் பண்டாரி கூறியதாவது, சுதீப்புடன் பணிபுரிவது எப்போதுமே சிறந்த அனுபவமாக இருக்கிறது. மக்கள் இந்த திரைப்படத்தை கொண்டாடுவார்கள் என்று நம்புகிறேன். சுதீப் இதை மிகப்பெரிய படம் என்று சொல்வது எனக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக உள்ளது. அதனால் எனக்கு மிகப் பெரிய பொறுப்பு வந்துள்ளது என்றார்.

பில்லா படத்தின் டைட்டில் பாலாஜியின் சுரேஷ் ஆர்ட்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்திலும், ரங்கா டைட்டில் தேவர் பிலிம்ஸ் நிறுவனத்திலும், பாட்ஷா டைட்டில் சத்யா மூவிஸ் நிறுவனத்திடமும் உள்ளது. இந்த டைட்டில்களை அந்த நிறுவனங்கள்தான் வைத்திருக்கின்றன. இப்படி அந்த நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான படங்களின் உரிமையை, அந்த நிறுவனங்களின் அனுமதி பெறப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. இந்த படம் கன்னடத்தில் தயாராவதால் அனுமதி பெறத் தேவையில்லை என்றும் ஒரு தகவல் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்