- Advertisement -
Homeபொழுதுபோக்குதலைமுறை இடைவெளிகளின் வாழ்க்கையை சொல்லும் புதிய படம் - தர்மன் படத்தை தொடர்ந்து நடிகர் ஜெயராம்...

தலைமுறை இடைவெளிகளின் வாழ்க்கையை சொல்லும் புதிய படம் – தர்மன் படத்தை தொடர்ந்து நடிகர் ஜெயராம் ஜோடியாக நடிக்கும் நடிகை சிம்ரன்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 1990களில் முன்னணி நட்சத்திர நாயகியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். அவர் நடித்த வாலி பிரியமானவளே அவள் வருவாளா அரசு பஞ்சதந்திரம் பம்மல் கே சம்பந்தம் ஏழுமலை ரமணா கண்ணெதிரெ தோன்றினாள் ஜோடி உள்ளிட்ட பல படங்கள் பெரிய வரவேற்பை வெற்றியை பெற்றன.

தொடர்ந்து திருமணத்துக்கு பிறகு சில காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்த நடிகை சிம்ரன் சேவல் பேட்ட அந்தகன் சீமராஜா உள்ளிட்ட படங்களின் வாயிலாக மீண்டும் ரீ என்ட்ரி தந்தார். இதில் டூரிஸ்ட் ஃபேமிலி படம் பெரிய வரவேற்பை சிம்ரனுக்கு பெற்றுத் தந்தது. இப்போது ரஜினிக்கு ஜோடியாக தர்மன் படத்தில் சிம்ரன் நடித்து வருகிறார்.

- Advertisement -

நடிகை ஜோதிகா நடித்த ராட்சசி மற்றும் நடிகர் அருள்நிதி நடித்த கழுவேத்தி மூர்க்கன் ஆகிய படங்களை இயக்கியவர் கௌதம் ராஜ். இந்த 2 படங்களுமே நல்ல கவனத்தை வரவேற்பை பெற்றன. இப்போது அவர் புதிய படம் ஒன்றை டைரக்ட் செய்ய உள்ளார். இந்த படத்தை ஒயிட் கார்பெட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் விஜய் பாண்டி ரிடாக்டட் ஸ்டுடியோஸ் சார்பில் சஞ்சன் ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

தி ஷோ பீப்பிள் சார்பில் நடிகர் ஆர்யா இந்த படத்தை வழங்குகிறார். இந்த படத்துக்கு இன்னும் டைட்டில் வைக்கப்படவில்லை. தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகராக உள்ள ஜெயராம் மற்றும் நடிகை சிம்ரன் இந்த படத்தில் இணைந்து முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இவர்களுடன் வாழை படத்தில் சிறுவனாக நடித்த பொன்வேல் மற்றும் தேவிகா சதீஷ் பகவதி பெருமாள் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர்.

- Advertisement -

இந்த படத்துக்கு அச்சு ராஜாமணி இசையமைக்கிறார். படம் குறித்து படக்குழுவினர் கூறியதாவது, குடும்ப பொழுதுபோக்கு படமாக உருவாகும் இந்த படம் 90 கிட்ஸ் 2கே தலைமுறை மற்றும் ஜென்சி தலைமுறை ஆகியோருக்கு இடையிலான உறவுகளையும் அவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரசியமான சம்பவங்களையும் மையமாகக் கொண்டு கலகலப்பான திரைக்கதையின் உருவாகி வருகிறது.

பல்வேறு தலைமுறைகளின் வாழ்க்கை முறை எண்ணங்கள் உறவுகள் மற்றும் அவர்களுக்கிடையேயான புரிதல் ஆகியவற்றை நகைச்சுவையுடன் பதிவு செய்யும் வகையில் இந்த படத்தின் கதைக்களம் அமைந்துள்ளது. படத்தின் மற்ற அப்டேட்ஸ் அடுத்தடுத்து விரைவில் வெளியாகும் என்றும் கூறினர். இந்த படமும் இளம் தலைமுறைக்கான ஒரு படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்