நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வரும் தீபாவளிக்கு அமரன் படம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். படத்துக்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம், இந்த படத்தை தயாரித்துள்ளது. தமிழகத்தை சேர்ந்த ராணுவ மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை மையப்படுத்திய கதை இது. இந்த படத்தில் மிக முக்கிய அம்சமாக, இதுவரை தனது படங்களில் இறப்பது போன்று நடிக்காத சிவகார்த்திகேயன், இந்த படத்தின் இறுதியில் இறந்து விடுகிறார்.
சிவகார்த்திகேயன், முகுந்தன் என்ற கதாபாத்திரத்தில் ராணுவ வீரராக மிக கம்பீரமாக இந்த கேரக்டரில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் புவன் அரோகரா, சுரேஷ் சக்கரவர்த்தி, ஸ்ரீகுமார் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் பிரமோஷன் பணிகள் வேகமாக நடந்து வருகின்றன.
அமரன் படத்தில் சிவகார்த்திகேயனை ஹீரோவாக தேர்வு செய்து எப்படி என்று படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், அமரன் படத்தில் மேஜர் கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைப்பது என்பதில் ஆரம்பத்தில் சில குழப்பங்கள் இருந்தது.
இதுகுறித்து நிறைய பேரிடம் பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் சில விஷயங்கள் எங்களுக்கும், சில விஷயங்கள் அந்த நடிகருக்கும் இந்த படத்தில் நடிப்பதில் தடையாக இருந்தது. சரியாக அது பொருந்தவில்லை. இப்படியே நீண்ட நாட்கள் போய்க் கொண்டிருந்த நிலையில், புதுமுக நடிகரை தேர்ந்தெடுக்கலாமா என்ற எண்ணமும் எனக்குள் வந்தது.
பின்னர் ஒரு பெரிய நடிகரை அந்த கேரக்டரில் நடிக்க வைத்தால் அது மேஜர் முகுந்தனுக்கு கொடுக்கும் மரியாதையாக இருக்கும் என்று யோசித்தோம். அப்போதுதான் என் மனதில் சிவகார்த்திகேயன் வந்தார். அதன்பிறகு அவரிடம் பேசி இந்த படத்தில் கதாநாயகனாக கமிட் செய்தோம் என்று ராஜ்குமார் பெரியசாமி கூறியிருக்கிறார்





