- Advertisement -
Homeபொழுதுபோக்குரொம்ப ரொம்ப சாதாரண விஷயம், நடிகர் விஜய்க்கு இதுகூட தெரியலையே? உண்மையை போட்டுடைத்த நடிகர் ஜீவா...

ரொம்ப ரொம்ப சாதாரண விஷயம், நடிகர் விஜய்க்கு இதுகூட தெரியலையே? உண்மையை போட்டுடைத்த நடிகர் ஜீவா – அப்செட் ஆன தளபதி ரசிகர்கள்

- Advertisement -

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர். இப்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தின் தலைவராகவும் இருக்கிறார். எச் வினோத் இயக்கத்தில் தனது 69வது படத்தில் நடித்து முடித்துவிட்டு சினிமாவுக்கு நிரந்தரமாக குட்பை சொல்ல முடிவு செய்திருக்கிறார். வரும் அக்டோபரில் இந்த படத்தின் ஷூட்டிங் துவங்க உள்ளது.

இதற்கிடையே வருகிற அக்டோபர் 27ம் தேதி, தமிழக வெற்றிக் கழகம் கட்சியில் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்னும் கிராமத்தில் நடைபெற உள்ளது. 50 ஆயிரம் பேர் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ள இந்த மாநாட்டில் தனது அரசியல் கொள்கை, கோட்பாடுகளை விஜய் பேச இருக்கிறார்.

- Advertisement -

நடிகர் விஜய் நடித்த வெற்றிப் படங்களில் நண்பன் படமும் ஒன்று. இந்த படத்தை இயக்குனர் ஷங்கர் இயக்கியிருந்தார். இந்த படத்தில் கல்லூரி மாணவர்களாக விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் ஆகியோர் நடித்திருந்தார். சத்யராஜ் கல்லூரி முதல்வராக நடித்திருந்தார். எஸ்ஜே சூர்யா முக்கிய கேரக்டரில் நடித்திருந்தார்.

இந்த படத்தில் நடித்த போது விஜய், ஜீவா இடையே நெருக்கமான நட்பு ஏற்பட்டது. இப்போது வரை அந்த நட்பு இறுக்கமாக தொடர்ந்து வருகிறது. இந்த சூழலில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகர் ஜீவா, நடிகர் விஜய் குறித்து பேசியிருக்கிறார். அதாவது ஐபிஎல் கிரிக்கெட் மேட்ச் நடந்த போது நடந்த ஒரு சம்பவத்தை பற்றி கூறியிருக்கிறார்.

- Advertisement -

நடிகர் ஜீவா எக்ஸ் தளத்தில் இதுபற்றி கூறியதாவது, விஜய்க்கு கிரிக்கெட் பற்றி எல்லாம் பெரிதாக தெரியாது. முதன்முறையாக ஐபிஎல் மேட்ச் நடக்கும்போது நான் அவருடன் இருந்தேன். அப்போது ஒரு பந்து பவுண்டரி சென்றது. பவுண்டரி என்றால் 4 ரன்களா, 6 ரன்களா என்று என்னிடம் விஜய் கேட்டார்.

அதற்கு நான், நீங்கள்தான் இதற்கு அம்பாசிடர். நீங்களே இப்படி கேட்கலாமா, என்று கேட்டேன். அவ்வளவுதான் அப்போது அவருக்கு கிரிக்கெட் நாலேட்ஜ் இருந்தது. ஆனால் விஜய் மகன் சஞ்சய்க்கு கிரிக்கெட் ரொம்ப பிடிக்கும். நாங்கள் நடத்தி சிசிஎல் போட்டிக்கு மூன்றுமுறை வந்தார். அவரது பங்கு மிகப்பெரிதாக இருந்தது என்று ஜீவா கூறியிருக்கிறார். விஜய்க்கு கிரிக்கெட்டே தெரியாது என்று ஜீவா கூறியது இப்போது வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்