- Advertisement -
Homeபொழுதுபோக்குவெகு சீக்கிரமாக இந்தி வெர்ஷனில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட அமரன் படம் - இது யாருக்காக தெரியுமா?...

வெகு சீக்கிரமாக இந்தி வெர்ஷனில் பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட அமரன் படம் – இது யாருக்காக தெரியுமா? நடிகர் கமல்ஹாசன் இப்படி எல்லாம் யோசிக்கிறாரே?

- Advertisement -

அயலான் படத்தைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் அமரன். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி டைரக்ட் செய்து இருக்கிறார். மறைந்த தமிழக ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு அமரன் படம் உருவாகி இருக்கிறது.

இதில் முகுந்த் என்ற கேரக்டரில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்திருக்கிறார் அவருக்கு மனைவியாக சாய் பல்லவி நடித்திருக்கிறார். இந்த படத்துக்கு ஜீவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வருகிற தீபாவளி பண்டிகைக்கு, 31ம் தேதி அமரன் படம் ரிலீஸ் ஆகிறது. அதற்கு முன்னதாக வருகிற 18ம் தேதி அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா, சாய்ராம் கல்லூரியில் நடக்கிறது. இதில் நடிகர் சிம்பு சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.

- Advertisement -

அமரன் படத்தின் காட்சிகள் தத்ரூபமாக அமைய வேண்டும் என்பதற்காக இந்தியாவின் முக்கிய இராணுவ மையங்களில், குறிப்பாக காஷ்மீரில் உள்ள ராணுவ முகாம்களில் அமரன் படத்தின் ஏராளமான காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. யாருமே நுழையவே முடியாத இடங்களில் கூட கமல்ஹாசன் அங்குள்ள ராணுவ உயரதிகாரிகளிடம் பேசி அமரன் படத்தின் ஷூட்டிங் நடக்க ஏற்பாடுகளை செய்திருக்கிறார்.

இதில், அந்நியர்கள் நடமாட்டத்துக்கே தடை விதிக்கப்பட்ட ராணுவ இடங்களில் கூட அமரன் படப்பிடிப்பு நடத்தப்பட்டு இருக்கிறது என்ற தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதற்கு முக்கிய காரணம் மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜன் எங்கெல்லாம் பணி செய்தாரோ, அந்தந்த இடங்களில் எல்லாம் அந்த படப்பிடிப்பை நடத்தி இருக்கிறார் கமலஹாசன்.

- Advertisement -

இதற்காக பெரிய பொறுப்புகளில் இருக்கும் ராணுவ அதிகாரிகளை நேரில் சந்தித்து பேசி இதற்கான முன் அனுமதியை கமல்ஹாசன் பெற்றிருக்கிறார். இப்போது படத்தின் ரப் காப்பி ரெடியான நிலையில், படத்தைப் பார்த்த படக்குழுவினர் மிகுந்த சந்தோசம் அடைந்துள்ளனர். அமரன் படம் சிறப்பாக உருவாக காரணமாக இருந்த இந்திய ராணுவ படை சேர்ந்த முக்கிய அதிகாரிகளுக்கு இந்த படத்தை காட்ட வேண்டும் என்று கமல் முடிவு செய்திருக்கிறார்.

இது தமிழ் மொழி படம் என்பதால், அவர்கள் அனைவருமே இந்தி மொழி தெரிந்தவர்கள் என்பதால் அவர்களுக்காக இந்தி வெர்ஷனில் இந்த படத்தை உருவாக்கி அவர்களுக்கு காட்ட படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசன் முடிவு செய்து, அமரன் படத்தின் ஸ்பெஷல் காப்பி தற்போது இந்தி வெர்ஷனில் உருவாக்கப்படுகிறது. ராணுவ வீரரை கௌரவப்படுத்தும் விதமாக எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தை அவர்கள் காண்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஏற்கனவே படம் பார்த்த ராணுவ வீரர்கள் சிலர் சொன்ன சில முக்கிய திருத்தங்களையும் அமரன் படத்தில் நடிகர் கமல்ஹாசன் செய்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்