2024 சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி (IIFA) விருதுகள் விழா அபுதாபியில் யாஷ் தீவில் உள்ள எதிஹாட் அரங்கில் 3 நாட்களாக நடந்தது. கடந்த 27ம் தேதி முதல் 29ம் தேதி ( நேற்று) வரை மூன்று நாட்கள் நடந்த இந்த விழாவில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைப்படம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டன.
சிறந்த நடிகர் விருது ஷாருக்கான், அட்லீ இயக்கிய ஜவான் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ஷாருக்கானுக்கு வழங்கப்படுகிறது. சிறந்த படம் ரன்பீர் கபூர் நடித்த நடித்த அனிமல் படம் தேர்வாகி உள்ளது. தெலுங்கு இயக்குனர் சந்தீப் ரெட்டி வாங்கா இந்த படத்தை டைரக்ட் செய்துள்ளார்.
சிறந்த நடிகை விருது ராணி முகர்ஜி தேர்வு செய்யப்பட்டுள்ளார். மிஸஸ் சாட்டர்ஜி விஎஸ் நார்வே படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவர் தேர்வாகி உள்ளார். அடுத்து சிறந்த இயக்குனர் விருது 12த் பெயில் படத்தை இயக்கிய விது வினோத் சோப்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சிறந்த துணை நடிகர் விருது அனிமல் படத்தில் நடித்த அனில் கபூர் பெறுகிறார். சிறந்த துணை நடிகை விருது, ராக்கி அவுர் ராணி பிரேம் கஹானி படத்தில் நடித்த மூத்த நடிகை ஷபானா அஸ்மி பெற உள்ளார். அதே போல் சிறந்த நெகடிவ் கதாபாத்திரம் விருது, அனிமல் பட வில்லன் பாபி தியோல் தேர்வாகி உள்ளார்.
சிறந்த கதைக்கான விருது, ராக்கி அவுர் ராணி பிரேம் கஹானி படம் தேர்வாகி உள்ளது. சிறந்த தழுவல் கதை, அதாவது உண்மை சம்பவங்களில் இருந்து உருவாக்கப்பட்ட கதைக்கான விருது பிளஸ் 2 பெயில் படம் தேர்வாகி உள்ளது. சிறந்த இசைக்கான விருது, அனிமல் படத்தின் இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் பெற உள்ளார்.
அதே போல் சிறந்த பாடல் விருது அனிமல் படத்தில் பாடல் எழுதிய சித்தார்த் கரிமா மற்றும் சத்ரங்கா ஆகியோர் பெற உள்ளனர். இதில் அனிமல் படம் 5 பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது. சிறந்த நடிகர், சிறந்த துணை நடிகர், சிறந்த இசை, சிறந்த பாடல் மற்றும் சிறந்த வில்லன் நடிகர் என 5 விருதுகளை வென்றிருக்கிறது. ஆனால் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் சர்ச்சையை, விமர்சனத்தை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.





