- Advertisement -
Homeபொழுதுபோக்குஇந்தியன் 3 நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா? இந்தியன் 2 தந்த நஷ்டத்தால் லைகா நிறுவனம்...

இந்தியன் 3 நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா? இந்தியன் 2 தந்த நஷ்டத்தால் லைகா நிறுவனம் எடுத்த திடீர் முடிவு – ஆனால் பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு எட்டப்படுமா?

- Advertisement -

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 1996ம் ஆண்டில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் இந்தியன். கமல்ஹாசன் இரட்டை வேடங்களில் அப்பா, மகனாக நடித்திருந்தார். இந்த படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக மத்திய அரசின் சிறந்த நடிகர் தேசிய விருது 3வது முறையாக கமல்ஹாசனுக்கு கிடைத்தது.

இந்த படத்துக்கு இசையமைப்பாளர் ஏஆர் ரகுமான் இசையமைத்து இருந்தார். சுகன்யா, கஸ்தூரி, ஊர்மிளா, மனிஷா கொய்ராலா, கவுண்டமணி, செந்தில், நெடுமுடி வேணு, நிழல்கள் ரவி, மனோரமா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். சுதந்திர போராட்ட வீரர் சேனாபதி கேரக்டரில் கமலின் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது.

- Advertisement -

இதையடுத்து 28 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இந்தியன் 2 படத்தை ஷங்கர் இயக்கினார். மீண்டும் சேனாபதி இந்தியன் தாத்தாவாக கமல் நடித்திருந்தார். அனிருத் இசையில் வெளியான இந்த படம், ரசிகர்களை கதற வைத்தது. உண்மையில் இது ஷங்கர் இயக்கிய படம்தானா என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. இந்தியன் 2 படம் படுதோல்வியடைந்தது.

ஆனால் இந்தியன் 2 படம் இயக்கிய போதே, இந்தியன் 3 படத்தையும் ஷங்கர் இயக்கி விட்டார். இப்போது கேம் சேஞ்சர் படத்தை முடித்த பிறகு இந்தியன் 3 படத்தை ஷங்கர் மிச்சம் இருக்கிற பகுதிகளை இயக்கிய பிறகு அடுத்த ஆண்டில் கோடைகால வெளியீடாக ஏப்ரல், மே மாதங்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஆனால் இப்போது இந்தியன் 3 படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட படத்தை தயாரித்துள்ள லைகா புரடக்சன்ஸ் நிறுவனமும், இயக்குனர் ஷங்கரும் முடிவு செய்துள்ளனர். ஏனெனில் ஏற்கனவே இந்தியன் 2 படம் தந்த பலத்த தோல்வியால், வினியோகஸ்தர்கள் இந்த படத்தை குறைந்த விலைக்கு கேட்க அதிக வாய்ப்புள்ளது. தவிர தியேட்டர்களிடம் இருந்து அட்வான்ஸ் பெறவும் முடியாது.

இந்தியன் 3 படத்தை நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியிட்டால் கணிசமான தொகை பெற முடியும், இந்தியன் 2 படத்தை ரூ. 125 கோடிக்கு வாங்கிய நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனத்திடம் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஏனெனில் 2025 ஆண்டில் வெளியிட வேண்டிய படங்களை நெட்பிளிக்ஸ் ஓடிடி நிறுவனம் இப்போதே லைன் அப் செய்யத் துவங்கி விட்டது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு கணிசமான விலை கிடைத்தால் மட்டுமே நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்தியன் 3 நேரடியாக வெளியாகும். இல்லை என்றால் தியேட்டர்களில்தான் வெளியாக வாய்ப்பு என்றும் ஒரு தகவல் உள்ளது.

- Advertisement -

சற்று முன்