- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலரில் வந்த காவலய்யா பாட்டு போல இந்த பாட்டும் செம வைரலாக வாய்ப்பு … ஆனா...

ஜெயிலரில் வந்த காவலய்யா பாட்டு போல இந்த பாட்டும் செம வைரலாக வாய்ப்பு … ஆனா இந்த முறையாவது நம்ம தலைவர் ஆசை நிறைவேறியதா?

- Advertisement -

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் கடந்த 2023ம் ஆண்டில் வெளியான படம் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையில் உருவான இந்த படம் பிளாக் பஸ்டர் மூவியாக இருந்தது. 600 கோடி ரூபாய்க்கு மேல் பாக்ஸ் ஆபீஸில் வசூலை குவித்தது. ரஜினிக்கு ஜெயிலர் படம் இன்னொரு பாட்ஷா என்றும் ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

இந்த படத்தில் ரஜினிகாந்துடன் ரம்யா கிருஷ்ணன் வசந்த் ரவி வில்லன் கேரக்டரில் மலையாள நடிகர் விநாயகன் மற்றும் சுனில் ரெடின் கிங்ஸ்லி மாரிமுத்து விடிவி கணேஷ் சரவணன் மாஸ்டர் ரித்விக் அறந்தாங்கி நிஷா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். மேலும் கேமியோ ரோலில் மோகன்லால் சிவராஜ்குமார் ஜாக்கி ஷெராப் கிஷோர் உள்ளிட்டோரும் நடித்திருந்தனர்.

ஜெயிலர் படம் பிளாக் பஸ்டர் மூவியாக வசூலை குவித்த நிலையில், சன்பிக்சர்ஸ் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் ரஜினி நெல்சன் மற்றும் அனிருத் ஆகியோருக்கு விலை உயர்ந்த சொகுசு கார்களை பரிசளித்தார். மேலும் ஜெயிலர் 2 படத்தில் நடிக்கவும் ரஜினியை கேட்டுக்கொண்டார். இப்போது ஜெயிலர் 2 படப்பிடிப்பு கேரளாவில் நடந்துவரும் நிலையில், ரஜினி அதில் நடித்து வருகிறார்.

ஜெயிலர் படத்தில் ஐட்டம் பாடலாக காவலய்யா பெரிய அளவில் வரவேற்பை பாராட்டை பெற்றது. இந்த குத்தாட்ட பாடலில் நடிகை தமன்னா நடனம் ஆடியிருந்தார். இந்த பாடல் ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்த நிலையில், பெரிய வரவேற்பை தமன்னாவுக்கும் பெற்றுத் தந்தது. கலை நிகழ்ச்சிகள் மற்றும் திருமண விழாக்களில் இந்த பாடலுக்கு தமன்னா நடனமாட ரூ. 1.5 கோடி வரை சம்பளம் பெறுவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இப்போது ரஜினி நடித்துள்ள கூலி படத்திலும் இதுபோன்ற ஒரு ஐட்டம் பாடல் வருகிறது. இந்த பாடல் காட்சியில் பீஸ்ட் ரெட்ரோ படங்களில் நாயகியாக நடித்துள்ள பூஜா ஹெக்டே குத்தாட்டம் போட்டிருக்கிறார். காவலய்யா பாடல் போலவே இதுவும் பெரிய அளவில் ரசிகர்களிடம் வைரலாகி வரவேற்பை பெறும் என்று சொல்லப்படுகிறது.

அதே நேரத்தில் ஜெயிலர் படத்தில் காவலய்யா பாடலின் போது என்னை தமன்னாவுடன் சரியாக நடனம் ஆட விடவில்லை. தமன்னாவுடன் நான் சரியாக பேசக் கூட இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் வெளிப்படையாக மேடையில் பேசியிருந்தார். அதனால் கூலி படத்தில் பூஜா ஹெக்டே போடும் குத்தாட்டத்தில் ரஜினி ஆடியிருக்கிறாரா, ஜெயிலர் பாடல் காட்சியில் தமன்னாவுடன் ஆட வாய்ப்பில்லாத ரஜினிக்கு, இந்த படத்தில் பூஜா ஹெக்டேவுடன் ஆட லோகேஷ் கனகராஜ் அனுமதித்து தலைவரின் ஆசையை நிறைவேற்றினாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சற்று முன்