- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த டைரக்டர் என்னை கன்னத்தில் அறைந்தார், தவமாய் தவமிருந்த நாயகி பத்மப்பிரியா சொன்ன அந்த விஷயம்...

அந்த டைரக்டர் என்னை கன்னத்தில் அறைந்தார், தவமாய் தவமிருந்த நாயகி பத்மப்பிரியா சொன்ன அந்த விஷயம் – மிருகம் படம் ஷூட்டிங்கில்தான் அது நடந்ததா?

- Advertisement -

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமான நடிகை பத்மபிரியா. இவர் தவமாய் தவமிருந்து படத்தில் நடிகர் சேரனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதேபோல் பொக்கிஷம் என்ற படத்திலும் சேரனுக்கு காதலியாக நடித்திருந்தார். சத்தம் போடாதே என்ற படத்தில் பத்மப்பிரியா நடிப்பு பெரிய அளவில் பேசப்பட்டது. வசந்த் இயக்கிய இந்த படத்தில் பிரித்விராஜ் மனைவியாக பத்மபிரியா நடித்திருந்தார்.

ஆதி கதாநாயகனாக நடித்த மிருகம் படத்தில் பத்மப்பிரியா நடித்திருக்கிறார். இந்த கேரக்டரில் பலரும் நடிக்க மறுத்த நிலையில், மிகவும் அழுத்தமான நடிப்பை இந்த படத்தில் வெளிப்படுத்தி இருந்தார். இதே போல் மலையாளத்திலும் பல படங்களில் பத்மப்பிரியா நடிப்பில் அசத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் மலையாள திரைத்றையில் பாலியல் குற்றங்கள் குறித்து வெளியான நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை, அங்கே நிகழும் பாலியல் பிரச்சனைகள், பெண்களுக்கு சம உரிமை மற்றும் ஊதியத்தில் வேறுபாடு உள்ளிட்ட பல விஷயங்களை வெளிச்சம் போட்டு காட்டியது.

இதை தொடர்ந்து பல நடிகைகள் சினிமாவில் தாங்கள் சந்தித்த துன்பங்களை, பாலியல் பிரச்னைகளை வெளிப்படையாகவே பேசி வருகின்றனர். அதேபோல் நடிகை பத்மப்பிரியாவும் தமிழ் படம் ஒன்றில் நடித்த போது தனக்கு ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவம் குறித்து சமீபத்தில் பேசியிருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து பத்மப்பிரியா கூறியதாவது, தமிழில் நான் ஒரு படத்தில் நடித்த போது, அந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது. அப்போது அந்த படத்தின் இயக்குனர் ஷூட்டிங் ஸ்பாட்டில், பல பேர் முன்னிலையில் என்னை கன்னத்தில் அறைந்தார். ஆனால் மீடியாக்களில் நான் அவரை அறைந்ததாக செய்திகள் வெளியானது. இது குறித்து நான் திரைப்பட சங்கங்களில் புகார் அளித்தேன்.
அதன் பிறகு அந்த இயக்குனர் 6 மாதங்கள் வரை படம் இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டார்.

நானே அடித்து விட்டு பிறகு நானே எதற்காக புகார் கொடுக்க வேண்டும் என யாருமே கேள்வி எழுப்பவில்லை என்று அந்த நேர்காணலில் பத்மப்ரியா வெளிப்படையாக பேசியிருக்கிறார். ஆனால் அப்போதும் அந்த இயக்குனர் பெயர் குறித்து அவர் சொல்லவில்லை. பத்மப்பிரியா தமிழில் இயக்குனர் சாமியின் டைரக்சனில் மிருகம் படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். அந்த படத்தில் நடித்த போதுதான், இப்படி ஒரு சம்பவம் நடந்தது என்று அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

- Advertisement -

சற்று முன்