- Advertisement -
Homeபொழுதுபோக்குசிவகார்த்திகேயன் முடிவில் ஏற்பட்ட திடீர் மாற்றம், அமரன் படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக நடிக்க இருப்பது...

சிவகார்த்திகேயன் முடிவில் ஏற்பட்ட திடீர் மாற்றம், அமரன் படத்தை தொடர்ந்து அவர் அடுத்ததாக நடிக்க இருப்பது அந்த படத்திலா? – 2வது இயக்குனரையும் வெயிட்டிங்கில் போட்டுட்டாரா?

- Advertisement -

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் அமரன். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயன், முகுந்த் என்ற கேரக்டரில் ராணுவ வீரராக நடித்திருக்கிறார். அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை கதையை கொண்டு அமரன் படம் உருவாக்கப்பட்டுள்ளது.

வரும் தீபாவளிக்கு, அமரன் படம் ரிலீஸாகிறது. இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாக ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்தியில் சல்மான்கான் நடிக்கும் சிக்கந்தர் என்ற படத்தையும், சிவகார்த்திகேயன் நடிக்கும் இந்த படத்தையும் ஏஆர் முருகதாஸ் மாற்றி மாற்றி இயக்கி வருகிறார்.

- Advertisement -

அமரன் மற்றும் ஏஆர் முருகதாஸ் படங்களை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக டாண் படத்தை இயக்கிய சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்தில்தான் நடிப்பதாக இருந்தது. அதன்பிறகு இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்க மறுத்து விலகிய புறநானூறு என்ற படத்தில் நடிக்கவும் திட்டமிடப்பட்டு இருந்தது. ஆனால் இந்த படத்துக்கு புறநானூறு என்ற டைட்டிலை மாற்றி வேறு பெயர் வைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த 4 படங்களுக்கு பிறகு வெங்கட்பிரபு இயக்கும் ஒரு படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க கமிட் ஆகி இருக்கிறார். ஆனால் அமரன் படத்தை தொடர்ந்து ஏஆர் முருகதாஸ், சிபி சக்கரவர்த்தி, சுதா கொங்கரா ஆகிய படங்களில் வரிசையாக நடிக்க முதலில் திட்டமிட்டு இருந்தார். இப்போது அந்த முடிவில் திடீர் மாற்றம் செய்திருக்கிறார்.

- Advertisement -

அதாவது ஏஆர் முருகதாஸ் படத்தை முடித்த பிறகு, அடுத்தாக சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் பேஷன் ஸ்டுடியோ தயாரிக்கும் படத்தில் நடிக்காமல் நேரடியாக சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார். அதன்பிறகு டாண் பட இயக்குனர் சிபி சக்ரவர்த்தி இயக்கும் படத்திலும், அடுத்ததாக வாய்ப்பிருந்தால் வெங்கட்பிரபு இயக்கும் படத்திலும் சிவகார்த்திகேயன் நடிக்க திட்டமிட்டுள்ளார்.

அமரன் படம் மிகப்பெரிய வரவேற்பை, எதிர்பார்ப்பை ரசிகர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. அடுத்து ஏஆர் முருகதாஸ் இயக்கும் படமும் சிவகார்த்திகேயனுக்கு பெரிய மாஸ் படமாக, துப்பாக்கி படம் போல இருக்க வாய்ப்புள்ளது. இப்படி தொடர்ந்து 2 வெற்றிப் படங்களை மாஸ் படங்களை தந்துவிட்டு 3வது படமாக சுதா கொங்கரா இயக்கும் படத்தில் நடிப்பதே சரியாக இருக்கும். பெரிய மாஸ் கொடுத்தால் ஹாட்ரிக் வெற்றியாக இருக்கும் என்பதால் இந்த முடிவை சிவகார்த்திகேயன் எடுத்திருப்பதாக தெரிய வந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்