நடிகர் தனுஷ் நடித்த ராயன் கேப்டன் மில்லர் படங்களுக்கு தேசிய விருது அறிவித்துள்ளனர். இந்நிலையில் புதுப்பேட்டை வடசென்னை போன்ற தனது படங்களுக்கு தேசிய விருது தரவில்லை என்று நடிகர் தனுஷ் சமீபத்தில் பேசியிருந்தார். இதுகுறித்து ஒரு நேர்காணலில் பேசிய மூத்த சினிமா பத்திரிகையாளர் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறியதாவது, தனது பிறந்த நாள் விழாவில் பேசிய நடிகர் தனுஷ் தனக்கு புதுப்பேட்டை படத்துக்கு தேசிய விருது கொடுக்கவில்லை என்கிறார்.
என்னுடைய பார்வையில் புதுப்பேட்டை ஒரு குப்பை படம். ஒருவேளை அந்த படத்துக்கு விருது கொடுத்திருந்தால் நான் வந்து அதை பயங்கரமாக விமர்சனம் பண்ணியிருப்பேன். அதே மாதிரி வடசென்னைக்கு ஏன் கொடுக்கலே அப்படீங்கறார். வடசென்னை ஆபாச வசனங்கள் நிறைந்த ஒரு கேங்ஸ்டர் படம். ரவுடி பயல்களை ஹீரோவாக சித்தரித்த ஒரு படம்.
அந்த படத்தை எல்லாம் பார்த்தால் சென்சார்லயே அனுமதிக்க கூடாது என்றுதான் நான் சொல்வேன். இவரை பார்த்தீங்க என்றால் அந்த படத்துக்கு தேசிய விருது கொடுக்கணும் என்று எதிர்பார்த்திருக்கிறார். அப்போ உங்க எதிர்பார்ப்பு அப்படி இருக்கிறது. நாங்க அந்த படத்தை வேற மாதிரி பார்க்கிறோம்.
அப்படி பார்த்தால் வடசென்னை புதுப்பேட்டை போன்ற படங்களுக்கு ஏன் தேசிய விருது கொடுக்கலே என்று கேட்க மாட்டார்கள். ஒரு நல்ல படம் சமூகத்துக்கு பயன்படுகிற ஒரு படம் என்றால் கொடுக்கலே என்றால்தான் மக்கள் கேட்பாங்க.
இப்போ வாழை படத்துக்கு ஏன் தரலேன்னு கேட்கறாங்க. ஏன்னா வாழை ஒரு வாழ்வியலை சொன்ன படம். ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் வாழ்க்கை அங்கே உள்ளே இருக்கு. வடசென்னை படத்துல என்ன இருக்கு? ரவுடிப்பயல்களை பத்தி நீங்க எடுத்து வெச்சிருக்கீங்க? அவங்களை நீங்க ஹீரோவா சித்தரிச்சு இருக்கீங்க?
அந்த படத்தை பார்க்கறவனுக்கு நாமும் அருவாளை எடுத்து 4 பேரை வெட்டி போடணும்ன்னு தோன்ற வைக்கிற படம் அது. அதுல சிறப்பா நடிச்சாருன்னு எப்படி விருது கொடுக்க முடியும்? என்று அந்த நேர்காணலில் பத்திரிகையாளர் ஜெ பிஸ்மி கேள்வி எழுப்பியிருக்கிறார்.





