தமிழ் சினிமாவில் 1990களில் முன்னணி நடிகையாக ஏராளமான படங்களில் நடித்தவர் ரோஜா. நடிக்க வந்த 8 ஆண்டுகளில் அவர் 100 படங்களில் நடித்திருந்து குறிப்பிடத்தக்கது. பொட்டு அம்மன் அவர் நடித்த 100வது படம். தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய இயக்குனர் ஆர்கே செல்வமணியை அவர் காதலித்து திருமணம் செய்துக்கொண்டார்.
திருமணத்துக்கு பிறகு 2 பிள்ளைகளுக்கு தாயான நடிகை ரோஜா, குடும்பத்தில் செட்டில் ஆகிவிட்டார். பிறகு ஆந்திரா அரசியல் களத்தில் குதித்த அவர் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் ஆட்சியில் ஆந்திராவில் எம்எல்ஏவாக 2 முறை, ஒருமுறை விளையாட்டுத்துறை அமைச்சராகவும் இருந்தார். இப்போது 12 ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் அன்பே டயானா படம் மூலம் ரீ என்ட்ரி தந்திருக்கிறார்.
சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை ரோஜா கூறியதாவது, நான் ஆரம்பத்தில் ரொம்பவும் சினிமா பைத்தியமாக இருந்தேன். முதல்ல இருந்தே படம் பார்க்கறதுல எனக்கு ரொம்பவும் இஷ்டம். நான் நடிகை ஆவேன்னு எப்பவும் நினைச்சது இல்லே.
நான் திருப்பதியில் படிக்கும் போது கூட பிரண்ட்ஸ் எல்லாம் போயி பேப்பர் எல்லாம் ஸ்கிரீன் முன்னால தூக்கி வீசிட்டு கைதட்டி படம் பார்க்கறது அப்படி ஒரு ஜாலியா இருக்கும். முதல் நாள் முதல் காட்சி பார்க்கிற மாதிரி காலேஜ் படிக்கிற டைம்ல அப்படி இருந்தேன்.
ஒரு பையனா பொறக்க வேண்டியது பொண்ணா பொறந்துட்டேன். எங்க அண்ணன் ரெண்டு பேரும் சைலண்ட்டா இருப்பாங்க. நான்தான் அப்போ ரொம்பவும் வயலண்டா இருப்பேன். நான் தெலுங்கில் வந்து நாகர்ஜூனா சிரஞ்சீவி சார் ரசிகையாக இருந்தேன். சீனியர் நடிகர்களில் கிருஷ்ணா சார் ரொம்பவும் பிடிக்கும்.
தமிழில் வந்து எனக்கு பிரபு கார்த்திக் ரெண்டு பேரும் ரொம்ப பிடிக்கும். அவங்க படம் எல்லாம் பார்த்திருக்கிறேன் என்று நடிகை ரோஜா அதில் கூறியிருக்கிறார். மேலும் என்னுடன் நடித்த இளம் நடிகர்களில் நான் மிகவும் ரசித்த மிகவும் அழகான பையன் என்று இருந்தவர் தமிழில் என் முதல் பட ஹீரோ பிரசாந்த் தான் என்றும் ரோஜா கூறியிருக்கிறார்.





