- Advertisement -
Homeபொழுதுபோக்குதமிழ் சினிமாவில் வில்லனாக இருந்து ஹீரோவாக பிரமோஷன் பெற்ற டைரக்டர் மிஷ்கின், அவர் நடிக்கப் போற...

தமிழ் சினிமாவில் வில்லனாக இருந்து ஹீரோவாக பிரமோஷன் பெற்ற டைரக்டர் மிஷ்கின், அவர் நடிக்கப் போற படம் டைட்டிலே மாஸா இருக்குதே? – லேட்டஸ்ட் அப்டேட் வந்தாச்சு!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கவனிக்கப்படும் ஒரு முன்னணி இயக்குனராக இருப்பவர் மிஷ்கின். சித்திரம் பேசுதடி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக மிஷ்கின் அறிமுகமானார். தொடர்ந்து அஞ்சாதே என்ற படத்தை இயக்கினார். அதன்பிறகு மிஷ்கின் இயக்கிய சைக்கோ, துப்பறிவாளன் உள்ளிட்ட படங்கள் பெரிய அளவில் வரவேற்பை, வெற்றியை பெற்றன.

வித்யாசமான கதைக்களத்தில் திகிலான, அதே நேரத்தில் திரில் ஆன படங்களை தருவதில் மிஸ்கின் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த இயக்குனராக உள்ளார். திரைப்படங்களை இயக்குவது மட்டுமின்றி சில படங்களில் மிஷ்கின் நடிக்கவும் செய்தார். குறிப்பாக சவரக்கத்தி, ஓ நந்தலாலா, மாவீரன், லியோ உள்ளிட்ட படங்களில் மிஷ்கின் நடிப்பு வேற லெவலில் இருந்தது.

- Advertisement -

இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் மிஷ்கின் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மிக விரைவில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ட்ரெயின் என்ற படம் வெளிவர இருக்கிறது. இந்த படத்தை தாணு தயாரித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பின் இந்த படத்தில் நாசர் வில்லனாக நடித்திருக்கிறார். ரயிலில் நடக்கும் சம்பவங்கள்தான் இந்த படத்தின் கதையாக உள்ளது.

அதேபோல் மகாராஜா படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி பரோட்டா மாஸ்டர் கேரக்டரில் நடிக்கும் படத்தை இயக்கும் பாண்டிராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் வில்லனாக மிஷ்கின் நடிக்கிறார். இயக்குனர், நடிகர், தயாரிப்பாளர், சமீபத்தில் இசையமைப்பாளராகவும் மாறியுள்ள மிஷ்கின் அடுத்ததாக ஹீரோ நடிகராக பிரமோஷன் பெற்றிருக்கிறார். இனி வரும் படங்களில் அவரும் ஒரு ஹீரோவாக ரசிகர்களை கவரும்விதமாக நடிப்பார் என்று தாராளமாக எதிர்பார்க்கலாம்.

- Advertisement -

இயக்குனர் மிஷ்கின் அடுத்ததாக நடிக்க உள்ள படத்தின் பெயர் ஓல்டு ஈஸ் கோல்டு. இந்த படத்தின் தலைப்பே ரசிகர்களுக்கு வெகுவாக கவர்ந்திருக்கிறது. இந்த படத்தை இயக்குனர் கோகுல் இயக்குகிறார். இவர் சமுத்திரக்கனி முக்கிய வேடத்தில் நடித்த ரைட்டர் என்ற படத்தில் பணிபுரிந்த உதவி இயக்குனர். ஓல்டு ஈஸ் கோல்டு படம்தான் அவர் இயக்கும் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தனது முதல் படத்திலேயே இயக்குனர் மிஷ்கினை இயக்கும் ஒரு சிறந்த வாய்ப்பு கோகுலுக்கு அமைந்திருக்கிறது. இந்த படத்தை விநியோகஸ்தர் ராகுல் தயாரிக்கிறார். சித்திரம் பேசுதடி படம் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவுக்குள் வந்தவர் மிஷ்கின். பிறகு வில்லன் நடிகராகவும், தயாரிப்பாளராகவும், இசையமைப்பாளராகவும் தன்னை வெளிப்படுத்திய மிஷ்கின், இப்போது ஹீரோவாகவும் பிரமோஷன் பெற்றிருப்பது தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

- Advertisement -

சற்று முன்