தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகையாக இருப்பவர் ஸ்ரீலீலா. புஷ்பா 2 படத்தில் அயிட்டம் சாங் ஒன்றுக்கு கிளாமர் குத்தாட்டம் போட்டிருந்தார். ஆனால் புஷ்பா முதல் பாகத்தில் வந்த சமந்தா குத்தாட்டம் போட்ட ஊ சொல்றியா மாமா பாடல் அளவுக்கு இந்த பாடல் அதிக வரவேற்பை ரசிகர்களிடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு படங்களை தொடர்ந்து இப்போது தமிழில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் நடிகை ஸ்ரீலீலா. அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான பராசக்தி படத்தில் கதாநாயகியாக ஸ்ரீலீலா நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக தோல்வி என்றாலும் நாயகியாக ஸ்ரீலீலா நடிப்புக்கு நல்ல அடையாளம் கிடைத்துள்ளது.
இதற்கிடையே இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜீத்குமார் நடிக்கும் ஏகே 64 படத்தில் கதாநாயகியாக நடிக்க ஸ்ரீலீலா ஒப்பந்தம் செய்யப்பட்டு இருந்தார். ஆனால் அந்த படம் எப்போது ஷூட்டிங் துவங்கும் என்று தெரியாத நிலையில் அதில் அஜீத்குமார் ஜோடியாக ஸ்ரீலீலா நடிப்பாரா என்பதே கேள்விக்குறியாக உள்ளது.
ஏனென்றால் பராசக்தி படத்தை தொடர்ந்து நடிகை ஸ்ரீலீலாவுக்கு தமிழில் பல பட வாய்ப்புகள் தேடி வருகின்றன. அந்த வகையில் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் பிரமாண்டமான ஒரு சயின்ஸ்பிக்சன் படம் உருவாகிறது. இந்த படத்தை டைரக்ட் செய்யும் நடிகர் பிரதீப் ரங்கநாதனே இந்த படத்தில் நாயகனாகவும் நடிக்க உள்ளார்.
கோமாளி லவ்டுடே டிராகன் டியூட் படங்களின் வெற்றிகளை தொடர்ந்து இளம் ரசிகர்களின் உள்ளங்களை கொள்ளை கொண்ட நடிகராக பிரதீப் ரங்கநாதன் உள்ளதால் அவரது படங்களுக்கு தமிழ் சினிமாவில் பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில் இந்த புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு ஸ்ரீலீலாவுக்கு அமைந்துள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த படத்தில் ஸ்ரீலீலா மட்டுமின்றி தி கோட் லக்கி பாஸ்கர் படங்களின் நடிகை மீனாட்சி சௌத்ரியும் நாயகியாக நடிக்கிறார். 2 கதாநாயகிகளுக்கு ஜோடியாக இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.





