- Advertisement -
Homeபொழுதுபோக்குஇணையத்தில் லீக் ஆன வீடியோ... இணையதள வாசிகளுக்கு நறுக்கென பதிலளித்த நடிகை ஓவியா... கப் சிப்...

இணையத்தில் லீக் ஆன வீடியோ… இணையதள வாசிகளுக்கு நறுக்கென பதிலளித்த நடிகை ஓவியா… கப் சிப் ஆன நபர்கள்…

- Advertisement -

நடிகை ஓவியா தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல் தென்னிந்திய பகுதிகளில் பலராலும் அறியப்பட்டவராய் இருக்கிறார். ஓவியாவின் உண்மை பெயர் ஹெலன் நெல்சன். திரைத்துறையில் வருவதற்காக தனது பெயரை அவர் மாற்றிக் கொண்டார். தமிழ் சினிமாவில் களவாணி திரைப்படம் தான் அவருக்கு முதல் படமாக அமைந்தது.

 

- Advertisement -

இதன் பிறகு தனது கேரியரை வளர்த்துக் கொண்டார் ஓவியா. மெரினா திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். பிறகு கலகலப்பு, மதயானை கூட்டம் என குறிப்பிடத்தக்க வெற்றி படங்களில் அவர் நடித்திருக்கிறார்.

 

- Advertisement -

தமிழ் சினிமா மட்டுமல்லாமல் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்து வந்த ஓவியாவுக்கு மிகப் பெரிய திருப்ப முனையை கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சி. பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் பங்கேற்ற அவர், அந்த ப்ரோக்ராம் நன்றாக செல்வதற்கு பெரிய பிளாட்பார்ம் ஆக அமைந்தார்.

 

அந்த நிகழ்ச்சியில் ஓவியாவின் குணாதிசயங்கள் பலருக்கும் மிகவும் பிடித்து போனது. எந்த ஒரு இடத்திலும் தனது இயல்பை மீறாமல், தனது சுயமரியாதையையும் விட்டுக் கொடுக்காமல் இருந்த ஓவியாவை பலரும் பாராட்டினார்கள். இதனால் அவருக்கு ரசிகர்கள் அமோக வரவேற்பை கொடுத்தனர். ஓவியா ஆர்மியையும் இணையத்தில் ஆரம்பித்தனர்.

 

இப்படி பெரிய அளவில் ரீச் ஆன ஓவியா, தற்போது திரைப்படங்களில் நடிப்பதில் இருந்து ஒதுங்கி இருக்கிறார். இப்படியான சூழலில், அண்மையில் இணையத்தில் அந்தரங்க வீடியோ ஒன்று வெளியானது. அதில் இருப்பது நடிகை ஓவியா என பலரும் கூறி வந்தனர். உடனடியாக இது இணையத்தில் வேகமாக பரவ ஆரம்பித்தது.

 

இப்படியான சூழலில் தனது instagram பக்கத்தில் ஓவியா புகைப்படத்தை ஒன்றை பதிவிட்டு இருந்தார். அப்பொழுது நபர் ஒருவர், வீடியோ வெளியாகி இருந்தது குறித்து கருத்து பதிவிட, ஓவியா அதற்கு என்ஜாய் என பதில் கூறியிருந்தார். மற்றொரு நபர் வீடியோவின் நீளம் மிகக் குறைவாக இருப்பதாக கமெண்ட் அடிக்க, நெக்ஸ்ட் டைம் ப்ரோ என சுளீர் என்று பதிலளித்தார் ஓவியா. இதன் புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக ஆரம்பித்திருக்கிறது.

 

- Advertisement -

சற்று முன்