விஜய் டிவியில் பிக்பாஸ் சீசன் 8 கடந்த வாரம் ஞாயிறு அன்று துவங்கியது. இந்த போட்டியில் மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கேற்றனர். குறிப்பாக பேட்மேன் எனப்படும் ரவீந்தர், நடிகர் ரஞ்சித், சீரியல் நடிகர்கள் தீபக், விஷால், அருண் பிரசாத் மற்றும் ஆர்ஜே அனிதா, தர்ஷிகா, ஜாக்குலின் உள்ளிட்ட 18 பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்களாக சென்றனர்.
பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த முதல் நாளிலேயே 24 மணி நேரத்தில் ஒரு போட்டியாளர் எலிமினேஷன் செய்து வெளியேற்றப்படுவார் என்று அதிரடியாக அறிவிக்கப்பட்டது. அதன்பின் மகாராஜா படத்தில் விஜய் சேதுபதிக்கு மகளாக நடித்த சாச்சனா என்ற போட்டியாளர் பிக்பாஸ் வீட்டில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டார். பிக்பாஸ் போட்டியாளர்களிலேயே மிகவும் குறைந்த வயதுடைய இளம் பெண்ணான அவரை 24 மணி நேரத்துக்குள் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றியது பார்வையாளர் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
எனினும் கடந்த ஒரு வாரமாக பிக் பாஸ் வீட்டுக்குள் வழக்கம் போல் சண்டை சச்சரவுகள் பிரச்சனைகள் என போட்டியாளர்கள் தங்களது பரபரப்பான வாழ்க்கையை நடத்தினர். இதற்கிடையே மீண்டும் சாச்சனா பிக் பாஸ் வீட்டுக்குள் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் மீண்டும் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டுக்குள் தொடர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த திங்களன்று பிக்பாஸ் போட்டியாளர்களுக்கான எவிக்சன் பிராசஸ் நடந்தது. இதில் நடிகர் ரஞ்சித், பேட்மேன் ரவீந்தர், ஜாக்குலின், அருண்பிரசாத் உள்ளிட்ட 6 பேர் எலிமினேஷன் செய்யப்பட்டனர். இந்த 6 பேரில் யார் பிக் பாஸ் வீட்டை விட்டு முதல் வாரத்தில் வெளியேறுவார் என்று பார்வையாளர்கள் மத்தியில் பலத்த ஆர்வமும் காணப்படுகிறது.
ஆனால் பிக்பாஸ் வீட்டுக்குள் இருப்பவர்களில் ரவீந்தர், ரஞ்சித் இருவருமே முக்கிய போட்டியாளர்களாக கருதப்படுகின்றனர். அவர்களுக்கு மட்டுமே ஒரு நாளில் 50 ஆயிரம் சம்பளம் என்று கூறப்படுகிறது. மற்றவர்களுக்கெல்லாம் 25 ஆயிரம் ரூபாய், 30 ஆயிரம், 10 ஆயிரம் ரூபாய் என சம்பளம் வழங்கப்படும் நிலையில், மக்கள் மத்தியில் அதிக பிரபலமான ரவீந்தர் மற்றும் ரஞ்சித் ஆகியோருக்கு மட்டுமே தினசரி சம்பளம் ரூ.50 ஆயிரம் என்று கூறப்படுகிறது.
ஆனால் முதல் வாரத்திலேயே ரஞ்சித், ரவீந்தர் இருவருமே எவிக்சன் செய்யப்பட்ட நிலையில், இருவரில் ஒருவர் வெளியேறுவார் என்று பார்வையாளர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் தற்போது வெளியான தகவலின்படி, பேட்மேன் ரவீந்தர் இந்த நிகழ்ச்சியிலிருந்து முதல் போட்டியாளராக வெளியேற்றப்படுகிறார். பிக்பாஸ் வீட்டுக்குள் அவர் உடல் நலம் இன்றி மிகவும் சிரமப்படுவதாகவும், உடல் பருமன் உள்ள அவரால் போட்டிகளில் மற்றவர்களைப் போல் இயல்பாக பங்கேற்க முடியாது என்பதாலும் அவரை பிக்பாஸ் வீட்டில் முதல் நாளாக வெளியேற்றி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





