தமிழில் பல வெற்றிப் படங்களை தந்தவர் இயக்குனர் கௌதம் மேனன். குறிப்பாக காக்க காக்க வாரணம் ஆயிரம் வேட்டையாடு விளையாடு விண்ணை தாண்டி வருவாயா போன்ற சூப்பர் ஹிட் படங்களை தந்தவர். விடுதலை விடுதலை 2 லியோ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
அவரது இயக்கத்தில் விக்ரம் நடித்த துருவ நட்சத்திரம் பல ஆண்டுகளாகியும் இன்னும் திரைக்கு வரவில்லை.
கடந்த 2012ம் ஆண்டில் சுந்தர் சி இயக்கத்தில் உருவான மதகஜ ராஜா படம், 12 ஆண்டுகளாக முடங்கி கிடந்த இந்த படம் இப்போது ஒருவழியாக கடந்த 12ம் தேதி ரிலீஸ் ஆனது. காமெடி கலந்த காதல் படமான மதகஜ ராஜா படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. இதேபோல் தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக ரிலீஸ் ஆகாமல் பெட்டிக்குள் முடங்கி கிடக்கும் பல படங்கள் திரைக்கு வர வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
அதில் மிக முக்கியமான ஒரு படம்தான் நடிகர் விக்ரம் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் உருவான துருவ நட்சத்திரம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2016ம் ஆண்டில் துவங்கப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு நிதி பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக படப்பிடிப்பு பலமுறை தடைப்பட்டது.
இருந்தாலும் அந்த தடைகளை எல்லாம் தாண்டி வெற்றிகரமாக கௌதம் மேனன் படப்பிடிப்பை நடத்தி முடித்தார். இந்த படத்தின் ரிலீஸ் தேதிகளை பலமுறை அறிவித்தும் பின்னர் அந்த தேதியில் வெளியிட முடியாமல் ஒத்தி வைத்தனர். இதனால் ரசிகர்கள் பலத்த ஏமாற்றம் அடைந்தனர். இந்த சூழலில் மலையாளத்தில் நடிகை மம்முட்டி தயாரித்து நடித்த டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ் படத்தை கௌதம் மேனன் டைரக்ட் செய்திருக்கிறார்.
இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கௌதம் மேனன் பங்கேற்றார். அப்போது துருவ நட்சத்திரம் படம் குறித்து சிலர் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த கௌதம் மேனன் கூறுகையில், துருவ நட்சத்திரம் படம் வெளியாக வேண்டிய சூழ்நிலையில் இருக்கும் போது யாரும் எனக்கு உதவ முன் வரவில்லை. யாரும் அதைப்பற்றி கண்டு கொள்ளவில்லை.
ஒரு படம் வெற்றி பெற்றால் அதை ஓ அப்படியா என்று கேட்பார்கள். அதற்கு யாரும் சந்தோஷப்பட மாட்டார்கள். தயாரிப்பாளர் தாணு இயக்குனர் லிங்குசாமி ஆகிய 2 பேர் மட்டுமே எனக்கு போன் செய்து பேசினார்கள். இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் இருக்கும் எதிர்பார்ப்பு மற்றும் அவர்கள் காட்டும் அன்பு மட்டுமே என்னை தொடர்ந்து இயங்க வைத்துக் கொண்டிருக்கிறது என்று கௌதம் மேனன் அப்போது கூறியிருக்கிறார்.





