- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகை நிவேதா பெத்துராஜ் கார் டிக்கிக்குள் இருந்தது அதுதான், அம்பலமானது வீடியோ ரகசியம் - என்னம்மா,...

நடிகை நிவேதா பெத்துராஜ் கார் டிக்கிக்குள் இருந்தது அதுதான், அம்பலமானது வீடியோ ரகசியம் – என்னம்மா, நீங்க இப்படி பண்றீங்களேம்மா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் ஒரு நாள் கூத்து படம் மூலம் அறிமுகமானவர் நடிகை நிவேதா பெத்துராஜ். டிக் டிக் டிக், பொதுவாக எம்மனசு தங்கம், திமிரு புடிச்சவன், பொன் மாணிக்கவேல் உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், சினிமாவில் போதிய வாய்ப்பின்றி துபாயில் செட்டிலாகி விட்டார்.

தமிழக அரசியல்வாதி ஒருவர், நிவேதா பெத்துராஜூக்கு 50 கோடி ரூபாயில் துபாயில், பங்களா வாங்கி தந்திருப்பதாக சமீபத்தில் தகவல் பரவி வைரலானது. ஆனால், அதில் சிறிதும் உண்மையில்லை. இது வதந்தி என, நிவேதா பெத்துராஜ் வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்திருந்தார். எனினும் அந்த விஷயம் சமூக வலைதளங்களில் வைரலானது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் காரில் சென்ற நிவேதா பெத்துராஜை வழிமறித்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்துகின்றனர். அப்போது, கார் டிக்கியை திறந்து காட்டுமாறு கூற அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து பேசுவது போல, வீடியோ காட்சி வைரலானது.

ஏற்கனவே சர்ச்சையில் சிக்கியிருந்த நிவேதா பெத்துராஜ், கார் டிக்கியில் எதை அப்படி மறைத்து எடுத்துச் செல்கிறார், போலீசாரிடம் அவர் சிக்கிய வீடியோ பாதியில் கட் ஆகி விட்டதே, அதற்கு பிறகு நடந்தது என்ன என்ற எந்த தகவலும் இல்லையே என ரசிகர்கள் பலரும் குழம்பிப் போன நிலையில், அதுபற்றிய உண்மையான தகவல் இப்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அதாவது, தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் பருவு என்ற வெப் சீரிஸ்சில் முக்கிய கேரக்டரில் நிவேதா பெத்துராஜ் நடித்து வருகிறார். அதில் ஒரு காட்சியில், சடலத்தை கார் டிக்கிக்குள் மறைத்து வைத்துக்கொண்டு நிவேதா பெத்துராஜ் காரில் வரும்போது, போலீசார் வழிமறித்து, அவரது காரை சோதனை செய்வது போன்ற காட்சி படமாக்கப்பட்டுள்ளது.

பருவு என்ற வெப் தொடருக்காக எடுக்கப்பட்ட அந்த காட்சி வீடியோவை தான், தொடரின் பிரமோசனுக்காக சமூக வலைதளங்களில் வெளியிட்டு, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளனர். இதுகுறித்த வீடியோவை தற்போது ஜி5 தங்களது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு, உண்மையை பகிரங்கப்படுத்தி உள்ளது. ஆக, விளம்பரத்துக்காக வெளியிடப்பட்ட வீடியோ அது என்பது உறுதியாகி உள்ளது.

சற்று முன்