- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் கேக் வெட்டிய அந்த காட்சியில், தி கோட் படத்தில் இயக்குனர் வெங்கட்பிரபு மிஸ்...

நடிகர் விஜய் கேக் வெட்டிய அந்த காட்சியில், தி கோட் படத்தில் இயக்குனர் வெங்கட்பிரபு மிஸ் ஆனது எப்படி? சகோதரி கிளப்பிய பஞ்சாயத்து – அப்படி ஒரு மனஸ்தாபம் இருந்ததா?

- Advertisement -

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடித்த அவரது 68வது படம் தி கோட். இந்த படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் தற்போது தனது 69 வது படத்தில், எச் வினோத் இயக்கத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான படம் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம். தி கோட் படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்தது.

தி கோட் படத்தின் மொத்த பட்ஜெட் 385 கோடி என்று கூறப்பட்டது. படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். தி கோட் படத்தில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. நடிகர் விஜய் இரண்டு வேடங்களில் அப்பா மகனாக நடித்திருந்தார். அப்பாவுக்கு ஜோடியாக நடிகை சினேகாவும், மகனுக்கு ஜோடியாக நடிகை மீனாட்சி சவுத்ரியும் நடித்திருந்தனர்.

- Advertisement -

மேலும் இந்த படத்தில் நடிகர்கள் பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், ஜெயராம், மைக் மோகன், ஆர் சிவா, யுகேந்திரன், ஒய் ஜி மகேந்திரா, கனிகா, வைபவ் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் கேமியோ ரோலில் நடிகர் சிவகார்த்திகேயனும், நடிகை திரிஷா மட்ட பட பாடல் காட்சியிலும் நடித்திருந்தனர். படத்தில் மற்றொரு முக்கிய சிறப்பம்சமாக ஏஐ தொழில் நுட்பத்தில் நடிகர் விஜயகாந்த் ஒரு நிமிட காட்சியில் வந்திருந்தார்.

தி கோட் படம் ஆரம்பத்திலிருந்து கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில், மொத்தமாக 460 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக சமீபத்தில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் தியேட்டர்கள் மூலமாக வரும் வருமானத்தில் ஷேர் ஆக மட்டும் 100 கோடியை கிடைத்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையடுத்து 100 கோடி ஷேர் கடந்ததை கொண்டாடும் விதமாக, நடிகர் விஜய், தி கோட் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோர் கேக் வெட்டும் காட்சி ஒரு வீடியோவாக சமூக வலைதளங்களில் சில தினங்களுக்கு முன் வைரலானது. அதில் நடிகர் விஜய் ஸ்பூனில் கேக் வெட்டி அருகில் இருக்கும் அர்ச்சனா கல்பாத்திக்கு ஊட்டி விடுகிறார். பதிலுக்கு அவரும் கேக் வெட்டி விஜய்க்கு ஊட்டி விடுகின்றனர். ஆனால் இந்த வீடியோ காட்சியில் படத்தின் இயக்குனரான வெங்கட் பிரபு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரி வாசுகி பாஸ்கர் வெளியிட்டுள்ள ஒரு ட்விட்டர் பதிவில், இந்த வீடியோவில் வெங்கட் பிரபுவும் படத்தின் இயக்குனர் என்ற முறையில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று குறிப்பிட்டிருக்கிறார். இப்போது இந்த விஷயம் வைரலாகி வருகிறது. அர்ச்சனா கல்பாதிக்கும், வெங்கட் பிரபுக்கும் ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாகவே இந்த நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கவில்லை என்றும், விஜய்க்கும், வெங்கட் பிரபுவுக்கு மனக்கசப்பு இருப்பதால்தான் இதில் பங்கேற்கவில்லை என்றும் சர்ச்சை கிளம்பி வைரலாகி வருகிறது.

- Advertisement -

சற்று முன்