- Advertisement -
Homeபொழுதுபோக்குபாகுபலி நாயகி அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம், தேவசேனாவை கரம் பிடிக்க போவது அந்த பிரபல ஹீரோ...

பாகுபலி நாயகி அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம், தேவசேனாவை கரம் பிடிக்க போவது அந்த பிரபல ஹீரோ இல்லையா?, – அவரது வருங்கால கணவர் யார் தெரியுமா?

- Advertisement -

நடிகை அனுஷ்கா, தமிழ் சினிமா ரசிகர்களால் மறக்க முடியாத ஒரு பேரழகியாக வலம் வந்தவர். சுந்தர் சி இயக்கிய ரெண்டு படத்தில், மாதவனுக்கு ஜோடியாக தமிழில், அனுஷ்கா அறிமுகமானார். ஆனால் அப்போது ரசிகர்களின் கவனத்தை அவர் பெரிதாக ஈர்க்கவில்லை.

அதன்பிறகு அருந்ததி படம், தெலுங்கில் இருந்து தமிழில் வெளியான போது, அருந்ததி கேரக்டரில் நடித்திருந்த அனுஷ்காவின் அழகை பார்த்து ரசிகர்கள் வாய் பிளந்து ஆச்சரியப்பட்டனர். அந்த படமும் மிகப்பெரிய அளவில் ஹிட் ஆனது. தொடர்ந்து தமிழில் அனுஷ்காவுக்கு வாய்ப்புகள் குவிய துவங்கின.

- Advertisement -

ரஜினியுடன் லிங்கா, விஜயுடன் வேட்டைக்காரன், சூர்யாவுடன் சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3, அஜீத்குமாருடன் என்னை அறிந்தால் உள்ளிட்ட படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார். தொடர்ந்து தெலுங்கிலும் டாப் ஸ்டார் நடிகர்களுடன் நடித்த அனுஷ்கா மிகப்பெரிய அளவில் ஸ்டார் நடிகையாக வலம் வந்தார்.

இதற்கிடையே டைரக்டர் ராஜமவுலி இயக்கத்தில் 2 பாகங்களாக வெளிவந்த பாகுபலி படத்தில் தேவசேனா என்ற கேரக்டரில் அனுஷ்கா நடித்திருந்தார். பாகுபலியாக நடித்திருந்த பிரபாஸ், அனுஷ்கா ஜோடி மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. பாகுபலி 2 பாகங்களே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இதையடுத்து பிரபாஸ், அனுஷ்கா இடையே காதல் மலர்ந்த நிலையில், இருவரும் மிகவும் நெருக்கமாக இருந்ததாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துக்கொள்வார்கள் எனவும் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் இஞ்சி இடுப்பழகி என்ற படத்துக்காக உடல் பருமனான கேரக்டரில் நடித்த அனுஷ்கா, பிறகு உடல் எடை குறைக்க முடியாமல் ஆண்ட்டியாக மாறி, படங்களில் நடிக்க வாய்ப்பின்றி வீட்டில் முடங்கினார். இப்போது மீண்டும் ஸ்லிம் ஆகி சில படங்களில் நடிக்க துவங்கியிருக்கிறார்.

நடிகர் பிரபாஸை தான் அனுஷ்கா திருமணம் செய்துக்கொள்வார் என பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில், இப்போது பிரபல கன்னட தயாரிப்பாளர் ஒருவரை அனுஷ்கா திருமணம் செய்ய இருப்பதாகவும், இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ள நிலையில், வரும் டிசம்பர் மாதத்துக்குள் திருமணம் நடக்கும் என்றும் தகவல் பரவி வருகிறது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

சற்று முன்