- Advertisement -
Homeபொழுதுபோக்குநடிகர் விஜய் கொடுத்த அந்த பரிசு, அமரன் படம் இசை வெளியீட்டு விழாவில் நெகிழ்ந்து பேசிய...

நடிகர் விஜய் கொடுத்த அந்த பரிசு, அமரன் படம் இசை வெளியீட்டு விழாவில் நெகிழ்ந்து பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் – தளபதி எப்பவுமே மாஸ்தான்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இப்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 என்ற படத்தில் அவர் நடித்து வருகிறார். இதையடுத்து சுதா கொங்கரா இயக்கும் ஒரு படத்திலும் அவர் நடிக்க கமிட் ஆகியுள்ளார். இது நடிகர் சூர்யா நடிக்க மறுத்த புறநானூறு படம்தான் என்பது கவனிக்கத்தக்கது.

கடந்த பொங்கல் பண்டிகைக்கு சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் அயலான் படம் வெளியானது. இந்த படத்தைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்து வெளிவர உள்ள படம் அமரன். ராஜ்கமல் பிலிம் இன்டர்நேஷனல் தயாரித்துள்ள இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி டைரக்ட் செய்துள்ளார்.

- Advertisement -

இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்துள்ளார். அமரன் படம் மறைந்த தமிழகத்தைச் சேர்ந்த இராணுவ மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை கொண்டு உருவாக்கப்பட்ட அவரது வாழ்க்கை வரலாறு படம். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வருகிற தீபாவளி பண்டிகைக்கு, 31ம் தேதி அமரன் படம் ரிலீஸ் ஆகிறது.

இந்நிலையில் நேற்று சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் அமரன் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன், நடிகை சாய் பல்லவி, இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி, மற்றும் இயக்குனர் மணிரத்னம் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர்.

- Advertisement -

இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் பேசுகையில், அமரன் படத்தில் நடித்த அனுபவங்கள் குறித்து ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். அப்போது அவரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர், தி கோட் படத்தில் நீங்கள் கேமியோ ரோலில் நடித்தபோது நடிகர் விஜய் உங்களிடம் துப்பாக்கியை கொடுத்தார். அதேபோல் உங்களுக்கு வாட்ச் ஒன்றும் கிப்ட் ஆக கொடுத்தார். இந்த இரண்டு பரிசுகளில் எது உங்களுக்கு பெஸ்ட்டாக தோன்றியது என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலளித்த நடிகர் சிவகார்த்திகேயன், தளபதி கொடுத்த அந்த அன்பு, அன்பு தான். அதுதான் எப்பவுமே ஸ்பெஷலானது என்று அவர் கூறியதும் அரங்கமே கரகோஷத்தில் அதிர்ந்தது. அந்த அளவுக்கு விஜய் தன் மீது கொண்ட அன்பின் காரணமாக தனது படத்தில் கேமியோ ரோலில் நடிக்க அனுமதித்ததும், தன்னை நேரில் சந்தித்தவுடன் வாட்ச் பரிசளித்து தன் அன்பை வெளிப்படுத்தியது குறித்தும் இந்த விழாவில் நடிகர் சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்