- Advertisement -
Homeபொழுதுபோக்குஜெயிலர் 2 படத்தை போல, நடிகர ரஜினிகாந்த் வேட்டையன் 2 படத்திலும் நடிக்கப் போகிறாரா? -...

ஜெயிலர் 2 படத்தை போல, நடிகர ரஜினிகாந்த் வேட்டையன் 2 படத்திலும் நடிக்கப் போகிறாரா? – இயக்குனர் தசெ ஞானவேல் சொன்ன தகவல்!

- Advertisement -

ஜெயிலர் படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்து வெளிவந்துள்ள படம் வேட்டையன். ஜெய்பீம் பட இயக்குனர் தசெ ஞானவேல் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் என்கவுண்டர் ஸ்பெசலிஸ்ட்டாக இந்த படத்தில் நடித்திருக்கிறார். கேமியோ ரோலில் அமிதாபச்சன் முக்கிய வேடம் ஏற்று நடித்திருக்கிறார்.

வேட்டையன் படத்தில் பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார், ரித்திகா சிங், துஷாரா விஜயன், ரோகிணி, கிஷோர், அபிராமி உள்ளிட்ட பலர் படத்தில் நடித்திருந்தனர். படத்துக்கு அனிருத் இசைமைத்துள்ளார். கடந்த 10ம் தேதி திரைக்கு வந்த வேட்டையன் படம் பாசிட்டிவ் விமர்சனங்களுடன் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

துவக்கத்தில் என்கவுண்டர், கல்வி வியாபாரம் குறித்து இந்த படம் பேசுவதாகவும், ரஜினியின் வழக்கமான மசாலா கமர்ஷியல் இல்லை என்றும் ரஜினி ரசிகர்கள் மத்தியில் ஒரு ஏமாற்றம் கிளம்பினாலும், ஒரு கட்டத்துக்கு பிறகு சமூகத்துக்கு தேவையான கருத்துகளை இந்த படம் கொண்டிருப்பதாக பாசிட்டிவ் விமர்சனம் அதிகரித்தது. இதனால் ரசிகர் கூட்டமும் அதிகரித்தது.

தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் வேட்டையன் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக ஆதரவும், வரவேற்பும் கிடைத்துள்ளது. இதனால் நல்ல வசூல் கிடைத்து வருகிறது. அந்த வகையில் 230 கோடி ரூபாய் வரை வேட்டையன் படம் வசூலித்திருப்பதாகவும் தமிழ்நாட்டில் மட்டும் 95 கோடி வசூலித்து இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில் வேட்டையன் படத்தின் 2ம் பாகம் உருவாகுமா என்று ரசிகர்களிடையே ஒரு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இயக்குனர் தசெ ஞானவேலிடம் ஒரு நேர்காணலில் கேட்டபோது, வேட்டையன் படத்தின் 2ம் பாகத்தை இயக்கம் எனக்கு உள்ளது.ஆனால் இந்தப் படத்தில் ரஜினி கதாபாத்திரத்தின் பேக் ஸ்டோரியை வைத்து ஒரு கதையை உருவாக்கும் எண்ணம் உள்ளது.. இதற்கு ரஜினி ஓகே சொன்னால் வேட்டையன் படத்தின் 2ம் பாகம் உருவாகும் என்று கூறியிருக்கிறார் இயக்குனர் தசெ ஞானவேல்.

தற்போது ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கூலி படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தை தொடர்ந்து நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதன் பிறகு வேட்டையன் 2ம் பாகத்தில் ரஜினி நடிப்பாரா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது. ஆனால் ஏற்கனவே ரஜினி வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனத்திற்கு ஒரு படம் நடிக்க ஒத்துக் கொண்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

சற்று முன்