கமல்ஹாசனை பொறுத்தவரை கற்றுக் கொள்வதில் மிகுந்த ஆர்வம் மிக்கவர். அதை அவர் 5 வயதில் களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான போதே அப்படி ஒரு ஆர்வமும், துடிப்பும், எதையும் கற்றுக் கொள்ளும் எதிர்பார்ப்பும் குட்டி கமலஹாசனிடம் காணப்பட்டதை, அப்போதே சில மூத்த நடிகர்கள் கவனித்து கூறியதுண்டு.
குறிப்பாக குட்டிப்பையனாக இருந்த கமல், படப்பிடிப்பு இடைவேளை நேரங்களில் கூட அங்குள்ள தியேட்டர்களில் ஆபரேட்டர் அறைக்கு சென்று, அங்கிருந்து திரையில் விழும் படத்தை பார்ப்பதை தான் வழக்கமாக கொண்டிருக்கிறார். 5 வயதிலேயே அந்த அளவுக்கு தொழில்நுட்ப விஷயங்களை தெரிந்து கொள்வதில் கமலுக்கு அதீத ஆர்வம் இருந்திருக்கிறது.
துவக்கத்தில் நடன இயக்குனராக தமிழ் சினிமாவுக்குள் வந்தவர் கமல்ஹாசன். நடனத்தில் சிறந்து விளங்க வேண்டும் என்பதுதான் அவரது விருப்பமும். அதனால்தான் தங்கப்பன் மாஸ்டரிடம் அவர் நடனம் கற்றுக் கொண்டார். அவரது சிஷ்யனாகவும் இருந்தார். அப்போது ஜெயலலிதா போன்ற ஸ்டார் நடிகைகளுக்கு நடனம் கற்றுத் தந்த அனுபவமும் கமல்ஹாசனுக்கு கிடைத்திருக்கிறது.
ஆனால் ஒரு கட்டத்துக்கு பிறகு, இயக்குர் கே பாலசந்தர் கமலை திரைப்பட நடிகராக அறிமுகம் செய்து வைத்தார். அதன்பிறகு நடிப்புத் துறையில் என்னென்ன விஷயங்கள் உண்டோ, அத்தனையும் கமல் கற்றுக்கொள்ள ஆரம்பித்தார். நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் மட்டுமின்றி கதை, திரைக்கதை, வசனம் எழுதுதல், படத்தை இயக்குதல், பாடல் எழுதுதல், பாடகராக பாடுதல் என கமல்ஹாசன் அடுத்தடுத்த நிலைக்கு தன்னை உயர்த்திக்கொண்டார். இப்போது தமிழ் சினிமாவில் அவருக்கு தெரியாத தொழில்நுட்பமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவர் சிறந்த தொழில்நுட்ப கலைஞராகவும் இருக்கிறார்.
அத்துடன் ஹாலிவுட் படங்களில், மற்ற மொழிப் படங்களில் உள்ள அட்வான்ஸ் தொழில்நுட்பங்களை எல்லாம் தமிழ் சினிமாவில் முதலில் அறிமுகம் செய்தது, நடிகர் கமல்ஹாசன் தான். தமிழ் சினிமாவை அடுத்தடுத்த நகர்வுகளுக்கு கொண்டு சென்றதில் நடிகர் கமல்ஹாசனுக்கு எப்போதுமே முக்கிய பங்கு உண்டு. இப்போது நடிகர் கமல்ஹாசன் 45 நாட்கள் அமெரிக்காவில் தங்கி ஏஐ தொழில்நுட்பம் குறித்து கற்றுக் கொள்கிறார்.
ஏஐ தொழில்நுட்பத்தை கமல் கற்றுக் கொள்வது மருதநாயகம் என்ற அவரது கனவு படத்தை குறைந்த பட்ஜெட்டில் உருவாக்க தான் என்ற ஒரு தகவல் பரவி வருகிறது. ஆனால் அப்படி ஒரு திட்டத்தில் கமல்ஹாசன் அதில் பங்கேற்கவில்லை என்று தெரியவந்துள்ளது. சமீபத்தில் இதுகுறித்து வீடியோ ஒன்றில் பேசிய மூத்த பத்திரிகையாளர் ஜெ.பிஸ்மி, தமிழக அரசுடன் இணைந்து சில திட்டங்களை நடிகர் கமல்ஹாசன் ஏஐ தொழில்நுட்பத்தில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளார். அதற்காக தான் அவர் ஏஐ தொழில்நுட்பத்தை ஆர்வமாக கற்று வருகிறார். கமல்ஹாசன் ஏஐ தொழில்நுட்பம் கற்று திரும்புவது தமிழக அரசுக்கு பயன்படும் விதத்தில் செய்படுவதற்காக தான் என்று அவர் கூறியிருக்கிறார். இது தற்போது வைரலாகி வருகிறது.





