- Advertisement -
Homeபொழுதுபோக்குகவின் நடிப்பில் ஸ்டார் படம் நாளை ரிலீஸ், படத்தின் டைரக்டர் இளன் ரசிகர்களுக்கு வைத்த திடீர்...

கவின் நடிப்பில் ஸ்டார் படம் நாளை ரிலீஸ், படத்தின் டைரக்டர் இளன் ரசிகர்களுக்கு வைத்த திடீர் கோரிக்கை – என்ன பாஸ் சொல்றீங்க?

- Advertisement -

நடிகர் கவின் விஜய் டிவியில் கனா காணும் காலங்கள் உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்து, மக்கள் மத்தியில் பரிச்சயமாகி ஒரு நடிகராக அறிமுகமானவர். அதன்பிறகு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்தார். பிக்பாஸ் வீட்டுக்குள் சக போட்டியாளரான லாஸ்லியாவை காதலித்த கவின், அவரது காதலுக்காக அந்த வீட்டுக்குள் சுத்தி சுத்தி வந்து, அவருக்காக பீலிங் செய்து அழுது பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தார்.

இந்நிலையில் கவின் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு, டாடா மற்றும் லிப்ட் ஆகிய படங்களில் நடித்த நிலையில், அந்த படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன. குறிப்பாக டாடா படத்தில் ஒரு இளம் தந்தையின் மன உணர்வுகளை பிரதிபலிக்கும் ஒரு மிகச்சிறந்த படைப்பாக இருந்தது. அந்த படத்தில் தனது நடிப்பை மிகச் சிறப்பாக அழுத்தமாக வெளிப்படுத்தி இருந்தார் கவின். இதையடுத்து, நடிகர் கவின் நடித்த ஸ்டார் படம் நாளை 10ம் தேதி வெளியாகிறது.

ஏற்கனவே ஸ்டார் படத்தின் டீசர் வெளியான நிலையில், அதில் இடம்பெற்ற காட்சிகள் வேற லெவலில் இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அதாவது ஒரு கல்லூரி மாணவன், பெரிய நடிகராக வெற்றி பெறுவதுதான் இந்த படத்தின் மையக்கரு. அதற்காக அவர் வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டங்களும், பிரச்சனைகளும் தான் இந்த படத்தின் திரைக்கதையாக உருவாக்கப்பட்டிருக்கிறது.

ஸ்டார் படம் ஒரு மிகப்பெரிய வெற்றி படமாக அமையும். கவினுக்கு அவரது சினிமா பயணத்தில் மிக முக்கியமான திருப்புமுனை படமாக ஸ்டார் படம் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் நாளை இயக்குனர் அமீர் நடித்த உயிர் தமிழுக்கு என்ற படமும், அதே போல் அர்ஜுன் தாஸ் நடித்த ரசவாதி தி அல்கெமிஸ்ட் என்ற படமும் ரிலீஸ் ஆகிறது. இதே போல் நாளை ரிலீசாக இருந்த சந்தானம் நடித்த இங்க நான்தான் கிங்கு என்ற படம் இன்னும் ஒரு வாரம் தள்ளிப் போயிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ஸ்டார் படத்தின் இயக்குனர் இளன் ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். தனது எக்ஸ் தளத்தில், நாளை முதல் ஸ்டார் என குறிப்பிட்டு, அதில் இந்த படத்தை எனது தந்தை ஸ்டில்ஸ் பாண்டியனுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று கூறியிருக்கிறார். இவரது தந்தை பல படங்களில் துணை பாத்திரங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்டார் இயக்குனர் நளன் அந்த எக்ஸ் பதிவில், ஸ்டார் படத்தில் வரும் முக்கியமான மூன்று விஷயங்களை தயவு செய்து படம் பார்க்கும் ரசிகர்கள் வெளியில் சொல்ல வேண்டாம். ஏனெனில் அந்த சர்ப்ரைஸ் ஆன விஷயங்களை படம் பார்க்கும் ரசிகர்கள் அவர்களாகவே அந்த சஸ்பென்சை உணரட்டும். எனவே தயவு செய்து அந்த மூன்று விஷயங்களை பற்றி, படம் பார்த்த ரசிகர்கள் வெளியே சொல்லிவிடாதீர்கள் என்று கோரிக்கை விடுத்துள்ளார். இப்படி இயக்குனர் கூறியிருப்பது ரசிகர்கள் மத்தியில் இன்னும் ஸ்டார் படத்தை பார்க்கும் ஆர்வத்தை அதிகரித்திருக்கிறது.

சற்று முன்