தமிழ் சினிமாவில் ரசிகர்களால் உலக நாயகன் என கொண்டாடப்படுபவர் நடிகர் கமல்ஹாசன். சினிமாவில் சகல கலைகளும் கற்றவர் என்பதால் கமல்ஹாசனுக்கு சகலகலா வல்லவன் என்ற பட்டப் பெயரும் உண்டு. தமிழ் சினிமாவின் நடிகர் கமல்ஹாசன் ஒரு கலைஞராக, பல்வேறு சாதனைகளை புரிந்தவர்.
நடிப்பில் மட்டுமின்றி கதை திரைக்கதை வசனம் எழுதுதல், படங்கள் இயக்கம், கவிஞர், பாடல் ஆசிரியர், சொந்தக் குரலில் பாடுவது, ஒளிப்பதிவு உள்ளிட்ட டெக்னீசியன் பணிகள் என கமல்ஹாசன் தொடாத தொழில்நுட்பங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு, தமிழ் சினிமாவில் சகல கலைகளிலும் வல்லவராக கமல் விளக்குகிறார்.
துவக்கத்தில் இளம் வயதில் நடிகராக கமல் நடிக்க ஆரம்பித்த புதிதில், அவர் பெரும்பாலும் காதல் படங்களில்தான் அதிக அளவில் நடித்தார். அவரது படங்களில் லிப் லாக் காட்சிகள் சர்வ சாதாரணமாக இருக்கும். உதட்டு முத்தக் காட்சிகளில் அதிகமாக நடித்த நடிகர் கமல்ஹாசனாக தான் இருப்பார். நடிகர் கமல்ஹாசன் காதல் காட்சிகளில், நாயகிகளுடன் நெருக்கமான காட்சிகளில் மிக அதிக படங்களில் நடித்திருக்கிறார். அதனால் கமலுக்கு காதல் மன்னன் என்ற பட்டப்பெயரும் தமிழ் சினிமாவில் உண்டு.
சொந்த வாழ்க்கையிலும் கமல்ஹாசன், வாணி கணபதி என்பவரை காதலித்து கரம் பிடித்தார். பிறகு அவரை விட்டு பிரிந்து குஜராத்தி நடிகை சரிகாவை திருமணம் செய்தார். அவருக்கு ஸ்ருதிஹாசன் அக்சரா ஹாசன் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். சரிகாவையும் ஒரு கட்டத்தில் பிரிந்த கமல்ஹாசன் அதன் பிறகு நடிகை கவுதமியுடன் லிவிங் டூ ரிலேஷன்ஷிப் முறையில் தாலி கட்டாமல் அவருடன் குடும்பம் நடத்தினார். நடிகை கௌதமியுடன் அந்த உறவும் ஒரு கட்டத்தில் அவர்களுக்குள் கசப்பை ஏற்படுத்த கௌதமியையும் கமல் பிரிந்து விட்டார்.
தமிழ் சினிமாவில் நடிகர் கமல் தொடர்ந்து பிஸியாக நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படம் கமலுக்கு கம்பேக் படமாக அமைந்தது. அதன்பிறகு இந்தியன் 2 படம் வெளியானது. ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அடுத்து மணிரத்னம் இயக்கத்தில், கமல் நடித்த தக்லைப் படம் வெளியாக உள்ளது. இதையடுத்து கமல்ஹாசன் ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்பறிவ் இயக்கத்தில் கமல் 237 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். தற்போது அமெரிக்காவில் தங்கி ஏஐ தொழில்நுட்ப பயிற்சி பெறும் கமல்ஹாசன், அடுத்த ஆண்டின் துவக்கத்தில் இந்த புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.
வருகிற நவம்பர் 7ம் தேதி நடிகர் கமல்ஹாசனின் 70வது பிறந்த நாளாகும். இந்த நேரத்தில் தற்போது கமல்ஹாசன் ஒரு அதிரடி முடிவு எடுத்துள்ளார். அதாவது இனிமேல் தனது வயதுக்குரிய கேரக்டரில் மட்டுமே நடிப்பது என்பதுதான். அதாவது இனிமேல் காதல் காட்சிகள், ரொமான்டிக் காட்சிகள், அந்த மாதிரியான காதல் படங்களாக இல்லாமல், வயதுக்கேற்ற வகையில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தும் வேடங்களில் நடிப்பது என்று அவர் முடிவு செய்து இருக்கிறார்.





