- Advertisement -
Homeபொழுதுபோக்குபிரமாண்ட ஏற்பாடுகளில் மாஸ் காட்டும் விஜய் கட்சி மாநாடு - முதல் மாநாட்டிலேயே அசத்திய தளபதி...

பிரமாண்ட ஏற்பாடுகளில் மாஸ் காட்டும் விஜய் கட்சி மாநாடு – முதல் மாநாட்டிலேயே அசத்திய தளபதி – திகைத்துப்போன தமிழக அரசியல் கட்சிகள்!

- Advertisement -

தமிழக வெற்றி கழகத்தின் அரசியல் மாநாடு நாளை ஞாயிறு அன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள விசாலை கிராமத்தில் நடைபெற உள்ளது. நாளை மதியம் 2 மணி வாக்கில் தொடங்கும் விழா மாநாடு இரவு 10 மணி வரை நீடிக்கலாம் என்று தெரிய வருகிறது. இந்த மாநாட்டில் இரண்டு மணி நேரத்துக்கு மேல் நடிகர் விஜய் பேச இருக்கிறார்.

இந்நிலையில் இந்த அரசியல் மாநாடு குறித்தும், அங்கு செய்யப்பட்டுள்ள பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது மாநாட்டுக்கு வரும் பொதுமக்கள், டிவிகே கட்சியினர் மற்றும் ரசிகர்கள் எந்த விதத்திலும் சிரமப்படக்கூடாது என்பதற்காக பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை நடிகர் விஜய் கூடுதல் கவனம் எடுத்து செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

- Advertisement -

அதன்படி மாநாட்டு திடல் பகுதி மற்றும் அதனைச் சுற்றி 3 கிலோமீட்டர் தூரத்திற்கு ஆங்காங்கே தண்ணீர் டேங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. நீர்ச்சத்து குறைபாடு ஏற்படுவதை தடுக்க மாநாட்டுக்கு வருபவர்களுக்கு குளுக்கோஸ் உள்ளிட்டவை தரப்படுகிறது. மாநாட்டுக்கு வருபவர்களுக்கு திடலில் உணவு வழங்கப்படவில்லை. மாநாட்டுக்கு வருபவர்கள் உணவு அருந்திவிட்டு வரவும் அல்லது உணவை எடுத்துக் கொண்டு வரவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

மாநாட்டு திடலில் பொதுமக்கள் அமர 50 ஆயிரம் இருக்கைகள் வசதி செய்யப்பட்டுள்ளது. மாநாடு திடலை சுற்றி 600 மொபைல் டாய்லெட் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 150 டாக்டர்கள், 150 மருத்துவ பணியாளர்களுடன் திடல் பகுதியில் 18 மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தயார் நிலையில் 20 தனியார் ஆம்புலன்ஸ்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.

- Advertisement -

மாநாட்டுக்கு வரும் வாகனங்களை நிறுத்த 200 ஏக்கர் பரப்பளவில் 4 இடங்களில் பார்க்கிங் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இதில் டூவீலர் பார்க்கிங் வசதிக்கு தனியாகவும், கார்கள் வேன்கள், பஸ்கள் போன்ற பெரிய வாகனங்கள் நிறுத்த தனி இடங்களும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாடு திடல் மற்றும் பார்க்கிங் பகுதிகளில் 500க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிப்பு செய்யப்படுகிறது.

மாநாட்டுக்கு வரும் பொதுமக்களுக்கு மொபைல் போன் பயன்பாடுக்காக, டவர் கிடைக்கும் வகையில் ஒரு மொபைல் டவர் மாநாடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. மாநாடு திடலில் நடைபெறும் நிகழ்ச்சியை பொதுமக்கள் பார்க்கும் வகையில் 72 இடங்களில் எல்சிடி திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. காவல்துறை பாதுகாப்பு மட்டுமில்லாமல் தனியார் தன்னார்வலர்கள் மூலம் 15 ஆயிரம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இது போன்ற சிறப்பு ஏற்பாடுகளை நடிகர் விஜய் தலைமையில் டிவிகே கட்சி நிர்வாகிகள் செய்திருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்