- Advertisement -
Homeபொழுதுபோக்குவேட்டையன் படம் ஓடிடி ரிலீஸ் எப்போன்னு தெரியுமா? ஆனா தி கோட் படத்தின் அந்த சாதனையை...

வேட்டையன் படம் ஓடிடி ரிலீஸ் எப்போன்னு தெரியுமா? ஆனா தி கோட் படத்தின் அந்த சாதனையை வேட்டையன் நெருங்க முடியுமா? – ரசிகர்கள் கேள்வி

- Advertisement -

இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 5ம் தேதி தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படம் ரிலீஸானது. விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருந்த இந்த படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். ஏஜிஎஸ் எண்டர்டெயின்ட்மென்ட் நிறுவனம் படத்தை ரூ. 385 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்தது. இதில் விஜய் சம்பளம் மட்டுமே ரூ. 200 கோடி என சொல்லப்பட்டது.

இந்த படத்தில் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், அஜ்மல், வைபவ், மைக் மோகன், சினேகா, லைலா, கனிகா என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. ஏஐ தொழில்நுட்பத்தில் கேப்டன் விஜயகாந்த் ஒரு நிமிட காட்சியில் வந்தார். கேமியோ ரோலில் சிவகார்த்திகேயன் கிளைமாக்ஸ் காட்சியில் வந்தார். மட்ட பாடலுக்கு திரிஷாவும் விஜயுடன் குத்தாட்டம் போட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

- Advertisement -

தி கோட் படம் ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்களை பெற்றாலும், படம் வெளியான சில தினங்களில் வில்லன் கேரக்டரில் நடித்த விஜய் நடிப்பு பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. அதனால் எதிர்மறை விமர்சனங்கள் நாளடைவில் காணாமல் போய் படத்துக்கு குடும்ப ஆடியன்ஸ் கூட்டம் அதிகரித்தது. படம் வெளியான ஒரு மாதத்தில் ரூ. 455 கோடி ரூபாயை தி கோட் படம் வசூலித்தது.

இம்மாதம் முதல் வாரத்தில் தி கோட் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கிறது. அதே போல் இன்னும் பல தியேட்டர்களில் தி கோட் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஓடிடி தளத்தில் வெளியான பிறகும், தி கோட் படத்தை தியேட்டர்களில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்போது 50 நாட்களை கடந்தும் தி கோட் சாதனை புரிந்துள்ளது.

- Advertisement -

அதே நேரத்தில் ரஜினி நடிப்பில், லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் வெளியான வேட்டையன் படம் தியேட்டர்களில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படம் வெளியான 4 வாரங்களில் ஓடிடி ரிலீஸ் செய்யலாம் என்பதால் வருகிற நவம்பர் 15ம் தேதி வாக்கில் வேட்டையன் படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதன்பிறகு 60 நாட்களில் சாட்டிலைட் ரிலீஸ் ஆகலாம் என்பதால், வரும் பொங்கலுக்கு வேட்டையன் சன் டிவியில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளது.

விஜய் நடித்த தி கோட் படம் ஓடிடியில் ரிலீஸ் ஆன பிற்கும் தியேட்டர்களில் ஓடி 50 நாட்கள் என்ற சாதனையை செய்திருக்கிறது. ஆனால் வேட்டையன் படமும் அப்படி ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆன பிறகும், தியேட்டர்களில் ஓடி சாதனை படைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. வசூலை பொருத்த வரை, ரசிகர்களை பொருத்த வரை ரஜினியை விட விஜய்க்குதான் மாஸ் அதிகம். அதனால் வேட்டையன் ஓடிடியில் வெளியான பிறகு, தியேட்டர்களில் ஓட வாய்ப்பே இல்லை என்று ரசிகர்கள் கூறுகின்றனர்.

- Advertisement -

சற்று முன்