- Advertisement -
Homeபொழுதுபோக்குவிக்கிரவாண்டியில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சி மாநாடு, மிக முக்கியமான அவரை காணலையே… -...

விக்கிரவாண்டியில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் எழுச்சி மாநாடு, மிக முக்கியமான அவரை காணலையே… – இந்த விஷயத்தை தலைவர் விஜய் கவனிக்காம விட்டுட்டாரா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் விஜய். இப்போது அவர் எச் வினோத் இயக்கத்தில் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் 5ம் தேதி கேரள மாநிலம் பையனூரில் துவங்கி விஜய் பங்கேற்ற ஒரு பாடல் காட்சி மட்டும் படமாக்கப்பட்டது. இதையடுத்து பிரேக் விடப்பட்டுள்ளது. தீபாவளிக்கு பிறகு வருகிற நவம்பர் 4ம் தேதி முதல் தளபதி 69 படப்பிடிப்பு மீண்டும் துவங்க இருக்கிறது.

தொடர்ந்து படப்பிடிப்பு நடத்தப்பட்டு, வரும் 2025ம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் இந்த படத்தை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து நடிகர் விஜய் முழு நேர அரசியலில் தீவிரம் காட்டப் போகிறார். தளபதி 69 படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகளை, படத்தின் இயக்குனர் எச் வினோத் மேற்கொள்ள இருக்கிறார். அடுத்த ஆண்டு அக்டோபரில் தீபாவளிக்கு இந்த படம் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

கடந்த ஞாயிறன்று நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் அரசியல் மாநாடு, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டில் உள்ள விசாலை என்னும் கிராமத்தில் நடந்தது. இதில் லட்சக்கணக்கான மக்கள் திரண்டு வந்து மாநாட்டில் பங்கேற்றது, தமிழக அரசியல் வட்டாரத்தில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியது. விசாலை பகுதியில் திரண்ட கட்டுக்கடங்காத கூட்டத்தை போலீசார் கண்ட்ரோல் பண்ண முடியாமல் தவித்தனர்.

அதனால் இரவு மணி வரை 8:30 மணி வரை நடத்த திட்டமிட்டிருந்த மாநாடு, மாலை 6,30 மணிக்கு முன்னதாகவே நிறைவடைந்தது. இந்த மாநாட்டில் நடிகர் விஜய் தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் பங்கேற்றார். மேலும் இந்த விழாவில் பார்வையாளர்களாக நடிகர் விஜயின் பெற்றோர் டைரக்டர் எஸ்ஏ சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்றனர். நடிகர்கள் ஸ்ரீமன், தாடி பாலாஜி ஆகியோரும் இந்த மாநாட்டில் பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்தனர்.

- Advertisement -

ஆனால் இந்த மாநாட்டில் முக்கிய அம்சமாக நடிகர் விஜயின் மனைவி சங்கீதா பங்கேற்கவில்லை. அதேபோல் விஜயின் மகன் ஜேசன் சஞ்செயும், மகள் திவ்யாவும் இந்த மாநாட்டில் பங்கேற்காதது பலத்த ஆச்சரியத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் நடிகர் விஜய், வேலு நாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகிய இரண்டு பெண் தலைவர்களை கொள்கை தலைவர்களாக கொண்டு தனது கட்சியை வடிவமைத்திருக்கிறார்.

தமிழக மக்கள் மத்தியில் குறிப்பாக இளம்பெண்கள், தாய்மார்களின் ஆதரவு விஜய்க்கு மிக அதிகமாக உள்ள நிலையில், அவரது மனைவி சங்கீதா இந்த மாநாட்டில் பங்கேற்று இருந்தால், இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக கடந்த ஆகஸ்ட் 22ம் தேதி பனையூரில் நடந்த தவெக கட்சிக்கொடி அறிமுக நிகழ்ச்சியிலும், விஜயின் மனைவி சங்கீதா பங்கேற்கவில்லை. ஆனால் அதே நேரத்தில் சில வாரங்களுக்கு முன் தமிழக முதல்வர் ஸ்டாலினின் அக்கா கணவர் முரசொலி செல்வம் மறைவுக்கு விஜயின் மனைவி சங்கீதா நேரில் வந்து துக்கம் விசாரித்தது குறிப்பிடத்தக்கது. விஜய் நடத்திய அரசியல் மாநாட்டில் விஜயின் மனைவி சங்கீதா பங்கேற்காதது சர்ச்சையாக மாறி இருக்கிறது.

- Advertisement -

சற்று முன்