- Advertisement -
Homeபொழுதுபோக்குஅமரன் படம் முதல் நாள் வசூல் நிலவரம், தனது முந்தைய படத்தின் சாதனையை முறியடித்த சிவகார்த்திகேயன்...

அமரன் படம் முதல் நாள் வசூல் நிலவரம், தனது முந்தைய படத்தின் சாதனையை முறியடித்த சிவகார்த்திகேயன் – தமிழகத்தை முந்திய ஆந்திரா, காரணம் யார் தெரியுமா?

- Advertisement -

தீபாவளி பண்டிகை தினமான நேற்று சிவகார்த்திகேயன் நடித்த அமரன், ஜெயம் ரவி நடித்த பிரதர், கவின் நடித்த பிளடி பெக்கர், மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடித்த தெலுங்கு படம் லக்கி பாஸ்கர் ஆகிய 4 படங்கள் வெளியாகின. இதில் லக்கி பாஸ்கர் படம் தெலுங்கில் இருந்து தமிழுக்கு டப்பிங் செய்யப்பட்ட படமாக இருந்தது. மற்ற 3 படங்களும் நேரடி தமிழ் படங்களாக இருந்தன.

இதில் சிவகார்த்திகேயன், சாய்பல்லவி நடித்த அமரன் படத்துக்கு தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. மறைந்த தமிழக ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தை நடிகர் கமல்ஹாசனின் சொந்தப்பட தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்திருந்தது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார்.

- Advertisement -

எதிர்பார்த்ததை காட்டிலும் அமரன் படத்துக்கு ரசிகர் மத்தியில் அமோக வரவேற்பும், ஆதரவும் கிடைத்துள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் இன்றி கேரளா, ஆந்திரா போன்ற பிற மாநிலங்களிலும் அமரன் படம் சக்கை போடு போட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் படத்தின் நாயகி சாய்பல்லவிதான். ஏனெனில் ஆந்திராவில், கேரளாவில் சாய்பல்லவிக்கு ரசிகர் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

அமரன் படம் தீபாவளி பண்டிகை நாளில் ரிலீஸானது. முதல் நாள் வசூல் நிலவரம் குறித்த தகவல் இப்போது வெளியாகி உள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் மட்டுமே ரூ. 13 கோடிக்கு மேல் வசூலித்திருப்பதாக தெரியவந்துள்ளது. 450 தியேட்டர்களில் வெளியான அமரன் படத்துக்கு ரசிகர்கள் தந்த ஆதரவால் முதல் நாள் வசூல் 13 கோடி ரூபாய்க்கு மேல் வந்துள்ளது. இதற்கு முன்பு நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படம், முதல் நாளில் 10.5 கோடி ரூபாய் வசூலித்தது. சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தின் முதல் நாள் வசூலை, அவரது அமரன் படமே முறியடித்து சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

தமிழ்நாட்டில் 450 தியேட்டர்களில் ரிலீசான அமரன் படம், ஆந்திராவில் 450க்கும் அதிகமான தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இதற்கு காரணம் ஆந்திராவில் நடிகை சாய் பல்லவிக்கு இருக்கும் அபரிமிதமான ரசிகர் கூட்டம் தான் என்று சொல்லப்படுகிறது. முதல் நாளிலேயே அமரன் படம் தெலுங்கிலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வசூல் சாதனை புரிந்திருக்கிறது.

இதுவரை வந்த வழக்கமான சிவகார்த்திகேயன் படம் போல் இல்லாமல், அமரன் படம் முழுக்க முழுக்க வித்தியாசமான கதைக்களத்தில், உருவாகியுள்ளது. அமரன் படம் சிவகார்த்திகேயனின் திரைப்பயணத்தில் மிக முக்கிய திருப்புமுனையான படமாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனை காட்டிலும் நாயகி சாய்பல்லவிக்கான முக்கியத்துவம் அதிகம் என்பதும், இந்த படத்தின் அபார வெற்றிக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. வரும் நாட்களில் அமரன் இன்னும் பல மடங்கு வசூல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

- Advertisement -

சற்று முன்