- Advertisement -
Homeபொழுதுபோக்குரிலீஸ் ஆன முதல் நாளிலேயே ஜெயம் ரவி, கவின் படங்களுக்கு ஆப்பு வைத்த லக்கி பாஸ்கர்...

ரிலீஸ் ஆன முதல் நாளிலேயே ஜெயம் ரவி, கவின் படங்களுக்கு ஆப்பு வைத்த லக்கி பாஸ்கர் – தெலுங்கு சினிமாவில் இப்படி ஒரு படமா என ஆச்சரியப்பட்ட தமிழ் ரசிகர்கள்!

- Advertisement -

பொதுவாகவே தெலுங்கு சினிமாவுக்கு என சில அடையாளங்கள் உண்டு. தமிழ் படங்களை காட்டிலும் தெலுங்கு படங்களில் மசாலாத்தனங்கள் அதிகமாக இருக்கும். குறிப்பாக ஹீரோயிசம் என்பது யாருமே எதிர்பார்க்காத அளவுக்கு ஓவர் பில்டப்பாக தான் இருக்கும். நடிகர் பாலகிருஷ்ணா நடித்த படங்களை பார்த்தால், இதெல்லாம் நம்பற மாதிரியா இருக்கு என்று சொல்லும் அளவுக்கு அவரது ஆக்சன் காட்சிகள் தமிழ் சினிமா ரசிகர்களை அதிர வைக்கும்.

140 கி.மீ., வேகத்தில் ஓடுகிற ரயிலை விட வேகமாக முன்னால் ஓடுவது, அசுர வேகத்தில் வரும் லாரியை சுண்டு விரலால் தடுத்து நிறுத்துவது, ஒரே அடியில் 100 பேர் தெறித்துப் போய் விழுவது, ஒரு துப்பாக்கி குண்டில் 10 பேரை சாகடிப்பது என்று தெலுங்கு பட ஹீரோக்கள் செய்யும் அட்ராசிட்டி ஆக்சன் பார்ப்பதற்கு செம காமெடியாக இருக்கும். சில நேரங்களில் ரசிகர்களின் தலைமுடியை பிய்த்துக்கொள்ளவும் வைக்கும்.

- Advertisement -

ஆனால் அப்படிப்பட்ட மசாலாத்தனங்கள் நிறைந்த ஆக்சன் படங்கள்தான் தெலுங்கு சினிமா ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஆரவாரத்தை, சந்தோஷத்தை தருகின்றன. அதனால் அந்த படங்கள் நிச்சயமாக வெற்றி படங்களாக ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகின்றன. அதேபோல் தெலுங்கு சினிமாவில் கதாநாயகிகளை கவர்ச்சிக்காக மட்டுமே பயன்படுத்துவார்கள்.

கலர் கலராக ஆடையணிந்து ஆபாசமாக டான்ஸ் ஆட விடுவார்கள். மழையில் நனைய விட்டு கிளுகிளுப்பு காட்டுவார்கள். தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை வில்லனை பழி வாங்குவது மட்டுமே ஹீரோவின் வேலையாக இருக்கும். அதைத் தவிர அவருக்கு வாழ்க்கையில் வேறு லட்சியமே இருக்காது என்பதுதான் பல படங்களில் கதையாக இருக்கிறது.

- Advertisement -

அப்படிப்பட்ட தெலுங்கு மசாலா படங்களுக்கு மத்தியில் துல்கர் சல்மான் நடித்த லக்கி பாஸ்கர் படம் நேற்று வெளியாகி, தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. பான் இந்தியா படமான லக்கி பாஸ்கர் படம் எவ்வித மசாலாத்தானங்களும் இன்றி சிறந்த ஒரு நல்ல படமாக ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றிருக்கிறது. தெலுங்கு சினிமா என்ற அடையாளமே இல்லாமல் ஒரு பல திருப்பங்கள் நிறைந்த ஒரு சுவாரசியமான படமாக உள்ளதால். லக்கி பாஸ்கர் படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

தமிழ்நாட்டில் லக்கி பாஸ்கர் படம் 150 தியேட்டர்கள் மட்டுமே ரிலீஸாவதாக இருந்த நிலையில், தற்போது 220 தியேட்டர்களில் இந்த படம் ஓடிக் கொண்டிருக்கிறது. வரும் நாட்களில் இன்னும் திரைகளின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதற்கு காரணம் இந்த படத்துக்கு தமிழ் சினிமா ரசிகர்களை அளித்துவரும் அமோக ஆதரவுதான். அதனால் தீபாவளிக்கு ரிலீசான ஜெயம் ரவி நடித்த பிரதர், கவின் நடித்த பிளடி பெக்கர் படங்களின் காட்சிகள் எண்ணிக்கையை கணிசமாக குறைத்துக் கொண்டு, லக்கி பாஸ்கர் படம் திரையிடப்பட்டு வருகிறது. மலையாள நடிகர் துல்கர் சல்மான் வந்து, ஜெயம் ரவி, கவின் நடித்த படங்களுக்கு ஆப்பு வைத்து விட்டார் என்று ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்