- Advertisement -
Homeபொழுதுபோக்குமீண்டும் விஜய் படத்தை இயக்க ஆசை... மனம் திறந்த நெல்சன்... ஐயோ வேணாம் சாமி என...

மீண்டும் விஜய் படத்தை இயக்க ஆசை… மனம் திறந்த நெல்சன்… ஐயோ வேணாம் சாமி என கதறும் ரசிகர்கள்…

- Advertisement -

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ஜெயிலர் திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அண்ணாத்த தோல்விக்கு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கும், பீஸ்ட் படத்திற்குப் பிறகு இயக்குனர் நெல்சனுக்கும் ஜெயிலர் திரைப்படம் நல்ல ஒரு கம் பேக்காக அமைந்துள்ளது.

படத்தில் முதல் பாதி ஆக்சன் காட்சிகளுடன் தூள் கிளப்பும் வகையில் இருந்ததாகவும், இரண்டாம் பாதியில் தொய்வு இருந்தாலும் அதிரடி திருப்பங்களுடன் கதை நகர்ந்ததால் சுவாரஸ்யமாக இருந்ததாகவும் ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர். குறிப்பாக இடைவேளை மற்றும் கிளைமேக்ஸ் காட்சிகள் மாஸாக இருந்தது என்றும் படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

- Advertisement -

கன்னட நடிகர் சிவராஜ் குமார், மலையாள பிரபலம் மோகன்லால் ஆகியோரை இறுதிக் காட்சிகளில் காட்டிய விதம் அற்புதமாக இருந்தது என்றும் கூறி வருகின்றனர். ஜெயிலர் திரைப்படம் வெற்றி பெற்றுள்ளதை அடுத்து, தளபதி விஜய் நெல்சனை செல்போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்திருக்கிறார். முதலமைச்சர் மு க ஸ்டாலினும் படத்தைப் பார்த்து, நெல்சனை வாழ்த்தியுள்ளார்.

படத்தின் முதல் நாள் வசூலும் மிகப்பெரிய அளவில் சாதனை படைத்திருக்கிறது. தமிழ்நாட்டில் மட்டும் 25 கோடி ரூபாய் வசூல் ஆன நிலையில், வெளி மாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளை சேர்த்து 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ள நெல்சன் கூறியிருப்பதாவது,

- Advertisement -

ஜெயிலர் படம் ரிலீஸ் ஆனதை தொடர்ந்து மோகன்லால் சார் எனக்கு செல்போனில் அழைத்து பேசினார். கேரளாவில் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருப்பதாக அவர் தெரிவித்தார். சிவராஜ்குமார் சாரும் என்னை அழைத்து பேசினார். அவர் இன்னும் படத்தை பார்க்கவே இல்லை. என்னை வைத்து நீங்கள் என்ன எடுத்துள்ளீர்கள் என்று எனக்கு தெரியவில்லை. இருப்பினும் இந்த படத்திற்கு அற்புதமான வரவேற்பு கிடைத்துள்ளது என்று கூறினார். இன்று மைசூரில் அவர் படத்தை பார்த்து இருப்பதாகவும் தெரிவித்தார்.

கதைப்படி மலையாளத்திலிருந்து ஒருவரை வில்லனாக வைத்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினேன். ஆனால் மம்முட்டியை வைத்து எல்லாம் திட்டமிடவில்லை. ஆட்கள் தேர்வின் போது விநாயகத்தின் இன்டர்வியூவை தொலைக்காட்சியில் பார்த்தேன். நான் எழுதி வைத்த கதாபாத்திரத்திற்கு அவர் சரியாக இருப்பார் என்று தோன்றியதால் உடனடியாக அவரை தொடர்பு கொண்டேன். படத்திற்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, விஜய் சார் என்னை வாழ்த்தினார். தளபதியுடன் மீண்டும் ஒரு படத்தை இயக்க ஆசைப்படுகிறேன். படம் எப்படி இருக்கிறது என்பதை எல்லாம் தாண்டி, அவருடன் வேலை பார்க்கும் தருணத்தை நான் ரசிக்கிறேன். விஜய் சார் உடன் பீஸ்ட் படத்தில் வேலை செய்த போது பல மகிழ்ச்சியான தருணங்கள் இருந்தது என்று அவர் கூறியிருக்கிறார். இதற்கு விஜய் ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்தாலும், படம் அடுத்த பீஸ்ட் மாதிரி ஆகிவிடக் கூடாது என்று இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

- Advertisement -

சற்று முன்