- Advertisement -
Homeபொழுதுபோக்குபிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழையப் போகும் 5 போட்டியாளர்கள், இனிமேலாவது ஆட்டம் சூடு...

பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு என்ட்ரியாக நுழையப் போகும் 5 போட்டியாளர்கள், இனிமேலாவது ஆட்டம் சூடு பிடிக்குமா? என கொட்டாவி விட்டபடி கேள்வி எழுப்பும் ரசிகர்கள்!

- Advertisement -

விஜய் டிவியில் கடந்த அக்டோபர் 6ம் தேதி பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி துவங்கியது. கடந்த ஆண்டு 2023 வரை 7 ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்த நிலையில், இந்த முறை நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கமல்ஹாசன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிக் கொண்டதால், அவருக்கு மாற்றாக விஜய் சேதுபதி தொகுப்பாளராக நியமனம் செய்யப்பட்டார்.

அவர் தற்போது பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார் . இந்த முறை 18 போட்டியாளர்களுடன் துவங்கிய அந்த நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் பேட்மேன் ரவீந்தர் வீட்டை விட்டு வெளியேறினார். அடுத்ததாக 2வது வாரத்தில் போட்டியாளர் அர்னவ் வெளியேறினார். 3வது வாரத்தில் போட்டியாளர் தர்ஷா குப்தா வெளியேற்றப்பட்டார்.

- Advertisement -

இப்போது பிக்பாஸ் வீட்டுக்குள் 7 ஆண்கள், 8 பெண்கள் என மொத்தம் 15 போட்டியாளர்கள் இருந்து வருகின்றனர். வழக்கமாக கடந்த 7 சீசன்களில் போட்டியாளர்கள் மத்தியில் நல்ல பரபரப்பு, விறுவிறுப்பு காணப்பட்டது. ஆனால் இந்த முறை போட்டியாளர்கள் மத்தியில், பெரிய அளவில் அவர்கள் பார்வையாளர்களை கவரவில்லை என்று தெரியவந்துள்ளது.

அதேபோல் நடிகர் கமல்ஹாசன் போல் இல்லாமல், விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் விதமும் மக்களுக்கு ஒரு விதமான சலிப்பை ஏற்படுத்தி விட்டதாக கூறப்படுகிறது. கமல்ஹாசன் இருந்தது போல் இந்த நிகழ்ச்சி ரசிக்கும்படியாக இல்லை என்று பலரும் வெளிப்படையாகவே பேசி வருகின்றனர்.

- Advertisement -

இந்த 8வது சீசன் மற்ற சீசன்களைப் போல சுவாரசியமாக இல்லை. கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகப்போகும் நிலையில், இன்னும் பிக்பாஸ் நிகழ்ச்சி பெரிய அளவில் பார்வையாளர்கள் மத்தியில் சூடு பிடிக்கவில்லை. எனவே பிக்பாஸ் நிகழ்ச்சியை மேலும் சுவாரசியப்படுத்தும் விதமாக வைல்டு கார்டு என்ட்ரியாக 5 பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மாடல் அழகி வர்ஷினி வெங்கட், சீரியல் நடிகர் ரயான், பட்டிமன்ற பேச்சாளர் மஞ்சரி, ரியா தியாகராஜன் ஆகியோர் பிக்பாஸ் வீட்டுக்குள் இன்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் நடிகரும் மிமிக்கிரி கலைஞருமான டிஎஸ்கே, சுஜா வருணியின் கணவர் மற்றும் நடிகர் சிவக்குமார் ஆகியோரும் பிக்பாஸ் வீட்டுக்குள் வர உள்ளனர்.இந்த 7 பேரில் 5 பேர் மட்டுமே வைல்டு கார்டு போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைகின்றனர். இனியாவது ஆட்டம் சூடு பிடிக்குமா என பார்வையாளர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -

சற்று முன்