சூர்யா நடித்திருக்கும் கங்குவா படம் வரும் 14ஆம் தேதி ரிலீசாகிறது. 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருக்கிறார். ஸ்டுடியோ க்ரீன் மற்றும் யுவி க்ரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து கங்குவாவை தயாரித்துள்ளது. தமிழ், தெலுங்கு உள்பட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் இந்த திரைப்படம் வெளியாகிறது.
இதற்கான புரமோஷன் வேலைகளில் தற்போது கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா. இந்த படத்திற்கு சூர்யா, கார்த்திக் சுப்பராஜுடன் இணைந்தார். சூர்யாவின் 44ஆவது படமாக எடுக்கப்பட்டிருக்கும் இதன் சூட்டிங், வெறும் நான்கே மாதங்களில் நிறைவு பெற்றது. அந்தமானில் இதற்கான பணிகளை தொடங்கிய கார்த்திக் சுப்பராஜ், கொடைக்கானல், சென்னை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை நடத்தினார்.
படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். கருணாகரன், ஜோஜூ ஜார்ஜ், ஜெயராம் உள்ளிட்டோரும் இதில் நடித்திருக்கிறார்கள். இது கேங்க்ஸ்டெர் படமாக எடுக்கப்படுவதாக கூறப்பட்டது. ஆனால் அதற்கு கார்த்திக் சுப்பராஜ் மறுப்பு தெரிவித்தார். இது ஒரு காதல் கதை என்றும், அதில் ஆக்சன் காட்சிகளும் எடுக்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவித்தார்.
இதில் குறுந்தாடி, ஃபக் வைத்து ரவுடி தோற்றத்திலேயே சூர்யா வருகிறார். மற்றொருபுரம் ஆயுத எழுத்து பட மைக்கேல் போன்ற தோற்றத்திலும் சூர்யா இருக்கிறார். இதனால் படத்தின் மீது எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. சூட்டிங் பணிகள் விரைவாக முடிந்தாலும், படம் அடுத்தாண்டு கோடை விடுமுறையில்தான் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படி தனது 44ஆவது படத்தின் வேலைகளை வேகமாக முடித்திருக்கும் சூர்யா, அடுத்ததாக யாரும் எதிர்பாராத வகையில் இயக்குநர் ஆர்ஜே பாலாஜியுடன் இணைந்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இதற்கு இசையமைக்கிறார். ஆர்ஜே பாலாஜி தனது நண்பர் சரவணகுமாருடன் இணைந்து மூக்குத்தி அம்மன் படத்தை எடுத்திருந்தார். இதுவும் அதேபோன்று ஆன்மீகம் கலந்து பேன்டசி படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
இதன் சூட்டிங் இம்மாதம் 3ஆவது வாரத்தில் ஆரம்பமாகிறது. முதற்கட்டமாக கோவையில் இதற்கான காட்சிகளை ஆர்ஜே பாலாஜி படமாக்குகிறார். ஏற்கெனவே கோவையில் சூர்யாவின் ஜில்லுனு ஒரு காதல் திரைப்படம் எடுக்கப்பட்டு பெரிய வெற்றியை பெற்றது குறிப்பிடத்தக்கது.





