- Advertisement -
Homeபொழுதுபோக்குநான் விழுந்தாலும் என்னை எழ வைக்கும் எழுச்சிக்குரல் - தமிழ் சினிமாவில் 21 ஆண்டுகளை நிறைவு...

நான் விழுந்தாலும் என்னை எழ வைக்கும் எழுச்சிக்குரல் – தமிழ் சினிமாவில் 21 ஆண்டுகளை நிறைவு செய்த நடிகர் விஷால் உருக்கம்!

- Advertisement -

தமிழ் சினிமாவில் கடந்த 2004ம் ஆண்டில் வெளியான செல்லமே என்ற படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் விஷால். இப்போது நடிகராக தயாரிப்பாளராக 21 ஆண்டுகளை அவர் நிறைவு செய்திருக்கிறார். மேலும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராக இருந்து வருகிறது. மிக விரைவில் நடிகை சாய் தன்ஷிகாவை திருமணம் செய்துக்கொள்ள உள்ளார்.

சினிமாவில் 21 ஆண்டுகளை நிறைவு செய்தது குறித்து நடிகர் விஷால் கூறியிருப்பதாவது, இன்று நான் நடிகனாக திரையுலகில் பயணித்து 21 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளேன். இந்த தருணத்தில் என் பெற்றோருக்கும் என் குருநாதர் நடிகர் ஆக்சன் கிங் அர்ஜூன் அவர்களுக்கும் லயோலா கல்லூரி ஆசிரியர் பாதர் ராஜநாயகம் அவர்களுக்கும் மேலும் என்னை உயர்த்தி அழகுபார்த்த அனைவருக்கும் வணக்கத்துடன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

- Advertisement -

இன்று உங்கள் அன்பில் உங்களை நம்பிக்கையில் உங்கள் கரகோஷத்தில் வாழும் நடிகனாக மாறி இருக்கிறேன். இந்த வெற்றிப் பயணத்தை என்னுடைய வெற்றியாக இல்லாமல் நமக்கான வெற்றியாக பார்க்கிறேன். எனக்கு உறுதுணையாக இருந்த தயாரிப்பாளர்கள் இயக்குனர்கள் சக நடிகர் நடிகைகள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

இதையெல்லாம் விட பெரிய சக்தியாக நான் கருதுவது என் உயிரான என் ரசிகர்கள். தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களான உங்கள் அன்பே என் உயிர். உங்கள் நம்பிக்கையே என் வலிமை. நான் விழுந்தாலும் என்னை எழ வைக்கும் எழுச்சி குரல் நீங்கள்தான். என் நம்பிக்கையும் நீங்கள்தான்.

- Advertisement -

இந்த 21 ஆண்டுகளில் எத்தனை சோதனைகளும் எத்தனை சவால்களும் வந்தாலும் எனக்கு துணையாக நின்று என் அருகில் தோள் கொடுக்கும் தோழனாக இருந்தது ரசிகர்களாகிய நீங்கள்தான். நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு படியும் நான் தேர்வு செய்யும் ஒவ்வொரு கதையும் நான் வாழும் ஒவ்வொரு நொடியும் உங்களுக்காகவே இருக்கும். உங்களை மகிழ்விக்கவே இருக்கும்.

இந்த பயணம் முடியவில்லை. இது ஒரு தொடக்கமே. நான் வெறும் நன்றி என்ற வார்த்தைகளால் முடிக்காமல் உங்களால் அடையாளம் காட்டப்பட்ட நான் எனது தேவி அறக்கட்டளையை எளிய ஏழை மக்களுக்கும் பெண் கல்விக்கும் மாணவ மாணவிகள் முன்னேற்றத்திற்காகவும் செயல்படுத்தி வருகிறோம். மக்களுக்கு என்னால் முடிந்த உதவிகளை நானும் என் இயக்கமும் என்றென்றும் செய்வோம். நான் உங்களில் ஒருவன். உங்களுக்காக எப்போதும் குரல் கொடுப்பேன் என்று உறுதியளிக்கிறேன் என்று நடிகர் விஷால் உருக்கமாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

சற்று முன்