- Advertisement -
Homeபொழுதுபோக்குகங்குவா பிரமோ நிகழ்ச்சியில் கேரள ரசிகர்களை சந்தித்த நடிகர் சூர்யா, அந்த வாரிசு நடிகர் படத்தை...

கங்குவா பிரமோ நிகழ்ச்சியில் கேரள ரசிகர்களை சந்தித்த நடிகர் சூர்யா, அந்த வாரிசு நடிகர் படத்தை பார்க்க சொன்னது சரிதானா? இப்போ விமர்சனத்தில் சிக்கிட்டாரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. கடந்த 2.5 ஆண்டுகளுக்கு முன் சூர்யா நடிப்பில் வெளியான படம் எதற்கும் துணிந்தவன். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யாவுடன் சத்யராஜ், இளவரசு, பிரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்த இந்த படம் சரியாக ரசிகர் மத்தியில் வரவேற்பை பெறவில்லை.

இதையடுத்து தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா படம் வரும் 14ம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகிறது. இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். வில்லனாக பாபி தியோல், திஷா பதானி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்துக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

- Advertisement -

கங்குவா படத்தின் பிரமோஷனுக்காக டெல்லி மும்பை ஐதராபாத் என பல இடங்களுக்கு நடிகர் சூர்யா, டைரக்டர் சிறுத்தை சிவா உள்ளிட்ட படக்குழு சென்று கொண்டிருக்கிறது. நேற்று கேரள மாநிலம் கொச்சியில் நடந்த கங்குவா படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா பங்கேற்றார். இந்த நிகழ்வில் கேரளாவைச் சேர்ந்த ரசிகர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

ரசிகர்களின் கூட்டத்தை பார்த்து அசந்து போன நடிகர் சூர்யா பேசுகையில், என்ன இது இத்தனை பேரா, என் வாழ்க்கையில் இதை மறக்கவே மாட்டேன். அன்புதான் கடவுள் என படித்திருக்கிறேன். இதுதான் அன்பு. நீங்கள்தான் கடவுள், இவ்வளவு கூட்டம் கிடைத்திருப்பதை வரமாக பார்க்கிறேன். 2.5 ஆண்டுகள் கழித்து கங்குவா படம் வெளியாக உள்ளது. இந்த படம் நெருப்பு மாதிரி இருக்கும் என்று ரசிகர் மத்தியில் பேசி தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்.

- Advertisement -

தொடர்ந்து பேசிய நடிகர் சூர்யா, எனது சின்னத்தம்பி துல்கரின் லக்கி பாஸ்கர் படம் நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது என்று கேள்விப்பட்டேன். யாரும் பார்க்கவில்லை என்றால் அந்தப் படத்தையும் பாருங்கள் என்று ரசிகர்களை கேட்டுக் கொண்டார். மேலும் இந்த நிகழ்ச்சியில் வாரணம் ஆயிரம் படத்தில் இடம்பெற்ற அஞ்சல பாடலுக்கு ரசிகர்களுடன் சேர்ந்து சூர்யா நடனம் ஆடினார்.

மலையாள நடிகர் மம்முட்டியின் மகன் துல்கர் சல்மான் நடித்த தெலுங்கு படம் லக்கி பாஸ்கர் கடந்த தீபாவளியன்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளது. ஆனால் அதைவிட சிறந்த படமாக தமிழில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடித்த அமரன் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. இந்த படத்தை பார்த்த சூர்யா, ஜோதிகா, சிவக்குமார் படக்குழுவை நேரில் அழைத்து பாராட்டி இருந்தனர். ஆனால் கேரளாவில் பேசிய நடிகர் சூர்யா, அமரன் படம் குறித்து பேசாமல் மலையாள நடிகர் மம்முட்டி மகன் நடித்த லக்கி பாஸ்கர் படத்தை பாருங்கள் என்று சூர்யா கூறியது தற்போது இணையத்தில் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

- Advertisement -

சற்று முன்