- Advertisement -
Homeபொழுதுபோக்குசூது கவ்வும் 2 படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட், இந்த படத்துல ஹீரோ விஜய்...

சூது கவ்வும் 2 படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட், இந்த படத்துல ஹீரோ விஜய் சேதுபதி இல்லையா? ரிலீஸ் தேதியும் வந்தாச்சு – போட்றா வெடிய!

- Advertisement -

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என அழைக்கப்படும் விஜய் சேதுபதி, துணை நடிகராக தன் சினிமா பயணத்தை துவங்கி, இன்று முன்னணி நடிகர்களில் ஒருவராக வெற்றி பெற்றவர். சில மாதங்களுக்கு முன் வெளியான அவரது 50வது படம் மகாராஜா மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

இப்போது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் பரோட்டா மாஸ்டர் கேரக்டரில் விஜய் சேதுபதி ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு மதுரையில் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மேலும் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பங்கேற்று வாரம்தோறும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

- Advertisement -

நடிகர் விஜய் சேதுபதி நடிக்க வந்த ஆரம்ப கட்டத்தில், பல வெற்றி படங்களில் நடித்தார். அந்த வெற்றிப் படங்களில் ஒன்றுதான் சூது கவ்வும் படம். கடந்த 2013ம் ஆண்டு இயக்குனர் நலன் குமாரசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்து வெளியான படம் சூது கவ்வும் பெரிய வெற்றி பெற்றது.

இந்த படத்தில் சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ராமேஷ் திலக், கருணாகரன், எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். டார்க் காமெடி பாணியில் உருவான இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இந்த படம் ஹீரோவாக விஜய் சேதுபதிக்கு ஒரு நல்ல வெற்றியையும் கொடுத்தது.

- Advertisement -

சூது கவ்வும் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, இப்போது 11 ஆண்டுகள் கழித்து சூது கவ்வும் படத்தின் 2ம் பாகம் உருவாகிறது. சூது கவ்வும் 2 படத்தை இயக்குனர் எம் எஸ் அர்ஜுன் இயக்குகிறார். இதில் விஜய் சேதுபதிக்கு பதிலாக பதிலாக நடிகர் மிர்சி சிவா நடிக்கிறார். இந்த படத்தை தங்கம் சினிமா சார்பில் எஸ் தியாகராஜன், திருக்குமரன் என்டர்டைமென்ட் சார்பில் சி வி குமார் இணைந்து தயாரிக்கின்றனர்.

சமீபத்தில் சூது கவ்வும் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் பாடல் வெளியாகி ரசிகர்களின் அதீத கவனம் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்து அப்டேட் தற்போது வெளியாகி உள்ளது. அதன்படி சூது கவ்வும் 2 படம் வருகிற டிசம்பர் மாதம் தியேட்டர்களில் ரிலீசாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. சூது கவ்வும் படத்தின் இயக்குனர், ஹீரோ இல்லாமல் வேறு இயக்குனர், வேறு ஹீரோ என உருவாகும் 2ம் பாகம் ரசிகர்களை பெரிய அளவில் கவருமா, என்பது டிசம்பரில் தெரிய வரும்.

- Advertisement -

சற்று முன்