- Advertisement -
Homeபொழுதுபோக்குஅந்த இரண்டு கேள்விகளுக்கும் மட்டும் பதில் சொல்ல மாட்டேன், அடம்பிடித்த நடிகர் யோகிபாபு - ஆனா...

அந்த இரண்டு கேள்விகளுக்கும் மட்டும் பதில் சொல்ல மாட்டேன், அடம்பிடித்த நடிகர் யோகிபாபு – ஆனா இந்த விஷயத்தை பட்டுன்னு போட்டு உடைச்சிட்டாரே பா…

- Advertisement -

தமிழ் சினிமாவில் இப்போது யார் பக்கம் அதிக காற்றடிக்கிறது, யார் காட்டில் நல்ல மழை என்றால், அதற்கு யோகிபாபுவை பதிலாக சொல்லலாம் போலிருக்கு. இனிமேல் யோகிபாபு இல்லாத படமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு பல படங்களில் அவர் கமிட் ஆகி நடித்துக்கொண்டே இருக்கிறார். பத்திரிகையாளர் சந்திப்புக்கு கூட வேறொரு படப்பிடிப்பில் கலந்துவிட்டு, 3 மணி நேரம் தாமதமாக வருகிறார்.

இப்படி யோகிபாபு நிற்க கூட நேரமில்லாமல் தொடர்ந்து நடித்துக்கொண்டிருக்க காரணம் நடிகர்கள் சந்தானம், சூரி இருவரும்தான். அவர்கள் ஹீரோவாக நடிக்க துவங்கிய பிறகு, அடுத்தக்கட்ட காமெடி நடிகர்களே இல்லாத சூழலில் இப்போது யோகிபாபுவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் வந்துக்கொண்டே இருக்கின்றன.

- Advertisement -

ஒரு படத்தில் நடிக்க ஒரு நாள் சம்பளமாக ரூ. 10 லட்சம் வரை யோகிபாபு சம்பளம் வாங்குகிறார். ஆனால் இதில் கொடுமை என்னவென்றால், யோகிபாபு நடிக்கும் படங்களில் அவர் வரும் காட்சிகளிலும் சரி, அவர் நடிக்கும்போது சரி ரசிகர்கள் மத்தியில் சிரிப்பு சத்தமே வருவதில்லை. என்றாலும், ரசிகர்களுக்கு அறிமுகமான காமெடி நடிகர் என்ற அடையாளமே அவருக்கு பட வாய்ப்புகளை பெற்றுத் தருகிறது.

இம்சை அரசன் 23ம் புலிகேசி, அறை எண் 305ல் கடவுள், புலி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் போட் என்ற படம், வருகிற ஆகஸ்ட் மாதம் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் கதையின் நாயகனாக யோகிபாபு நடித்திருக்கிறார். இந்த படத்தின் பிரமோவுக்காக யோகிபாபு குறித்து கூகுளில் அதிகளவில் தேடப்பட்ட கேள்விகளுக்கு அவர் பதில் தந்துள்ளார்.

- Advertisement -

ஆனால் அதில் இரண்டு கேள்விகளுக்கு மட்டும் நடிகர் யோகிபாபு பதில் அளிக்காமல் தவிர்த்துள்ளார். தனக்கு பிடித்த காமெடி நடிகர்கள் என கவுண்டமணி, செந்தில் மற்றும் நடிகவேள் எம்ஆர் ராதா ஆகியோரது பெயர்களை யோகிபாபு கூறியிருக்கிறார். அதே நேரத்தில் பலரும் சொல்ல தயங்குகிற விஷயமாக, யோகிபாபு 10ம் வகுப்பு பெயில் என்ற என்ற தகவலை வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

ஆனால் அதிகமுறை கூகுளில் தேடப்பட்ட கேள்விகளில் இரண்டுக்கு மட்டும் அவர் பதில் அளிக்காமல் தவிர்த்துள்ளார். அந்த கேள்விகள் என்னவென்றால், யோகிபாபுவின் இப்போதைய வயது என்ன, அவர் இப்போது படத்தில் நடிக்க வாங்குகிற சம்பளம் ஆகிய இரண்டு கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லாமல் விட்டுள்ளார் யோகிபாபு. ஆனால் 10ம் வகுப்பு பெயில் ஆனதை பகிரங்கமாக ஒத்துக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

சற்று முன்