- Advertisement -
Homeபொழுதுபோக்குஇயக்குனர் அட்லிக்கு கிடைத்த வெற்றி, வெளிப்படையாக பேசிய இயக்குனர் ஷங்கர், அப்படி தான் எனக்கு...

இயக்குனர் அட்லிக்கு கிடைத்த வெற்றி, வெளிப்படையாக பேசிய இயக்குனர் ஷங்கர், அப்படி தான் எனக்கு இருந்தது என்றும் விமர்சனம் – என்ன இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டாரே?

- Advertisement -

தமிழ் சினிமாவில் கொண்டாடப்படும் இயக்குனராக இருப்பவர் டைரக்டர் ஷங்கர். பல சூப்பர் ஹிட் படங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்தவர். குறிப்பாக சிவாஜி எந்திரன் நண்பன் முதல்வன் இந்தியன் அந்நியன் ஜீன்ஸ் போன்ற பல வெற்றி படங்களை தந்தவர் இயக்குனர் ஷங்கர். கடந்த 1990களில் இந்திய சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் என்ற அடையாளத்தை முதன் முறையாக பெற்றவர்.

தற்போது நடிகர் சிரஞ்சீவி மகன் ராம்சரண் நடித்த கேம் சேஞ்சர் படத்தை ஷங்கர் டைரக்ட் செய்திருக்கிறார். வருகிற ஜனவரி 10ம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக உள்ளது. அடுத்ததாக நடிகர் கமல்ஹாசனின் இந்தியன் 3 படம் ஷங்கர் இயக்கத்தில் வெளியாக உள்ளது. இந்தியன் 2 பலத்த தோல்வியடைந்த நிலையில், இந்தியன் 3 படத்தை மாபெரும் வெற்றிப்படமாக தர ஷங்கரும், கமலும் முடிவு செய்திருக்கின்றனர்.

- Advertisement -

இயக்குனர் ஷங்கரிடம் உதவி இயக்குனராக பல படங்களில் பணிபுரிந்தவர் அட்லி. ஆர்யா, நயன்தாரா நடித்த ராஜா ராணி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அட்லி அறிமுகமானார். முதல் படத்திலேயே மாபெரும் வெற்றி பெற்ற அட்லி அடுத்ததாக நடிகர் விஜய் நடித்த மெர்சல், தெறி, பிகில் ஆகிய சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட்டார்.

இதைத்தொடர்ந்து இந்தியில் ஸ்டார் நடிகர் ஷாருக்கான் படத்தை இயக்கும் வாய்ப்பு அட்லிக்கு கிடைத்தது. ஷாருக்கான் நயன்தாரா விஜய் சேதுபதி யோகி பாபு பிரியாமணி தீபிகா படுகோனே உள்ளிட்டார் நடித்த ஜவான் படத்தை அட்லி இயக்கினார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 1150 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனை புரிந்தது. இப்போது இந்திய அளவில் கொண்டாடப்படும் ஒரு இயக்குனராக அட்லி இருந்து வருகிறார்.

- Advertisement -

சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற இயக்குனர் ஷங்கரிடம் லியோ படம் குறித்தும், ஜவான் படம் குறித்தும் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்து பேசிய இயக்குனர் ஷங்கர், நான் லியோ படம் பார்த்தேன். லோகேஷ் கனகராஜ் மிக நன்றாக இயக்கியிருந்தார். ஜவான் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் அட்லி காட்டி ஈடுபாடு, கடின உழைப்பு தெரிகிறது. அந்த படமும் என்னை பிரமிக்க வைத்தது.

சாதாரணமாக எல்லாம் இந்த வெற்றி கிடைத்து விடாது. எனக்கு மிகவும் பெருமையாகவும், சந்தோஷமாகவும் இருக்கிறது. என்னுடைய உதவி இயக்குனர் அட்லி இந்த அளவுக்கு வளர்ந்துள்ளது, என் மகன் சாதித்தால் எவ்வளவு சந்தோஷம் மற்றும் பெருமைப்படுவேனோ அதேபோல்தான் இதுவும் எனக்கு என்று ஷங்கர் கூறியிருக்கிறார். துணை இயக்குனராக தன்னிடம் பணி செய்த அட்லியின் வெற்றியை, தனது மகனுக்கு கிடைத்த வெற்றி போல் பெருமைப்படுவதாக இயக்குனர் ஷங்கர் கூறியிருப்பது, ரசிகர்கள் மத்தியில் பலத்த பாராட்டை பெற்று வருகிறது.

- Advertisement -

சற்று முன்