பைக்கில் சாகசங்கள் செய்து அதை வீடியோவாக யூடியூப்பில் பதிவிட்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் யூடியூபர் டிடிஎச் வாசன். இவர் மக்கள் மத்தியில் பிரபலமானவராக இருந்த நிலையில், இயக்குனர் செல்அம் இயக்கத்தில் மஞ்சள் வீரன் என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்க டிடிஎப் வாசன் கமிட் செய்யப்பட்டார்.
இயக்குனர் செல்அம் ஏற்கனவே திருவிக பூங்கா என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. கடந்த செப்டம்பர் மாதத்தில் செய்தியாளர்களை சந்தித்த இயக்குனர் செல்அம், மஞ்சள் வீரன் என்ற படத்தில் இருந்து படத்தின் கதாநாயகன் டிடிஎப் வாசன் நீக்கப்படுவதாக அறிவித்தார்.
மஞ்சள் வீரன் படத்தில் நடிக்க அவர் சரியான ஒத்துழைப்பு தரவில்லை என்றும் அதனால்தான் அவர் இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் இயக்குனர் செல்அம் தெரிவித்தார். அதன் பின்னர் மஞ்சள் வீரன் படத்தில் டிடிஎப் வாசனுக்கு பதிலாக நடிகர் கூல் சுரேஷ் கதாநாயகனாக நடிப்பார் என்ற தகவல் வெளியானது.
இந்நிலையில் தற்போது டைரக்டர் செல்அம் மஞ்சள் வீரன் படம் குறித்த அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மஞ்சள் வீரன் படத்திற்கான படப்பிடிப்பு தளங்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றன. கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதி படத்தின் கதாநாயகனை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்து இருந்தேன். ஆனால் அன்று அறிமுகப்படுத்த முடியவில்லை என்றும் கூறியிருந்தார்.
ஆனால் வருகிற நவம்பர் மாத இறுதியில் அல்லது டிசம்பர் மாதம் தொடக்கத்தில் மஞ்சள் வீரன் படத்தின் கதாநாயகன் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடுவதாக செல்அம் தெரிவித்துள்ளார். எதையும் தாங்கும் மனவலிமை கொண்ட மாவீரனை தான் மஞ்சள் வீரன் படத்தின் கதாநாயகனாக அறிமுகப்படுத்துவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதனால் மஞ்சள் வீரன் படத்தில் கதாநாயகன் கூல் சுரேஷ் என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. எதையும் தாங்கும் மனவலிமை கொண்ட மாவீரனை தான் மஞ்சள் வீரன் படத்தின் கதாநாயகனாக அறிமுகப்படுத்துவேன் என்று இயக்குனர் செல்அம் கூறியிருப்பதால், நிச்சயமாக காமெடி நடிகரான கூல் சுரேஷ் அந்த படத்தில் நாயகனாக நடிக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் பலத்த குழப்பமடைந்துள்ளனர்.





