- Advertisement -
Homeபொழுதுபோக்குமுதல் நாள் முதல் காட்சி மூலம் படங்களுக்கு ஆப்பு வைக்கும் ரசிகர்கள்… இப்படி ஒரு நடைமுறை...

முதல் நாள் முதல் காட்சி மூலம் படங்களுக்கு ஆப்பு வைக்கும் ரசிகர்கள்… இப்படி ஒரு நடைமுறை வந்தால் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா?

- Advertisement -

ஒரு படத்தின் வெற்றிக்கு ரசிகர்களின் ஆதரவும், வரவேற்பும் மிகவும் முக்கியம். என்னதான் பெரிய பட்ஜெட்டில், டாப் ஸ்டார் நடிகர்கள் ஹீரோவாக நடித்திருந்தாலும் ரசிகர்களின் ஆதரவும், வரவேற்பும் இருந்தால்தான் அந்த படம் பெரிய வெற்றியை பெற முடியும். சர்க்கஸ் காட்டி எல்லாம் ரசிகர்களை ஏமாற்றி ஒரு படத்தை ஜெயிக்க வைக்க முடியாது.

அதற்கு சிறந்த உதாரணங்களாக கமல் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 படம் அடைந்த படுதோல்வியை சொல்லலாம். இப்போது 2 தினங்களுக்கு முன் வெளியான சூர்யா நடித்த கங்குவா படத்துக்கு கிடைத்த எதிர்மறை விமர்சனங்களை குறிப்பிட்டுச் சொல்லலாம். கமல், சூர்யா இருவருமே வெற்றி தரும் ஹீரோக்களாக இருந்தும் படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை.

- Advertisement -

முன்பெல்லாம் நாளிதழ்களில் படம் குறித்த திரைவிமர்சனம் பார்த்து தியேட்டர்களுக்கு ரசிகர்கள் போவார்கள். அதன்பிறகு டிவி சேனல்களில் படம் குறித்த விமர்சனங்கள் வந்தன. அதே நேரத்தில் படம் பார்த்த ரசிகர்கள் சொல்லும் விமர்சனங்களே பலரையும் படம் பார்க்க தியேட்டர்களுக்கு செல்ல வைத்தன.

மொபைல் போனில் பல்வேறு தகவல் தொடர்பு வசதிகள் பெருகிய இன்றைய சூழலில், தியேட்டரில் படம் ரிலீஸான முதல் நாளில் முதல் காட்சி பார்க்கும் ரசிகர்கள் வெளியே வந்தவுடன் சொல்லும் முதல் விமர்சனம்தான் அந்த படத்தின் வெற்றி, தோல்வியை தீர்மானிக்கிறது. சூப்பர் என்றால் வெற்றி, மொக்கை என்றால் படுதோல்வி என்பதை மாற்ற முடியாது.

- Advertisement -

இந்த சூழலில், ரசிகர்களின் பலத்த ஆதரவால் வெற்றி பெற்ற படம் சமீபத்தில் வெளியான லப்பர் பந்து. பெரிய நடிகர்கள் இல்லை, அறிமுக இயக்குனர் படம். கிரிக்கெட் விளையாட்டுதான் கதை என பெரிய பில்டப் இல்லாத இந்த படம் இந்த ஆண்டில் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட படங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

முதல் நாள் முதல் காட்சி என்பது மாநிலங்களுக்கு மாநிலம் மாறுபடுகிறது. தமிழ்நாட்டில் காலை 9 மணிக்குதான் முதல் காட்சி. கேரளா, கா்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில், அதிகாலை 4 மணி, காலை 7 மணி காட்சிகள் முதல் நாள் முதல் காட்சிகளாக வெளியாகின்றன. இந்த விமர்சனங்களை தவிர்க்க, ஒரே நேரத்தில் முதல் காட்சி திரையிட்டால் மற்ற பகுதிகளில் இருந்து வரும் நெகடிவ் விமர்சனங்களை தமிழ்நாட்டில் தவிர்க்க முடியும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்