- Advertisement -
Homeபொழுதுபோக்குஅண்ணன் சூர்யாவுக்காக அந்த கொள்கையை விட்டுக் கொடுத்த நடிகர் கார்த்தி - ஆனா உங்க ரசிகர்கள்...

அண்ணன் சூர்யாவுக்காக அந்த கொள்கையை விட்டுக் கொடுத்த நடிகர் கார்த்தி – ஆனா உங்க ரசிகர்கள் பத்தி நீங்க நினைச்சு பார்க்கலையே ப்ரோ?

- Advertisement -

தமிழ் சினிமாவில் மார்கண்டேயன் என அழைக்கப்பட்டவர் நடிகர் சிவக்குமார். ஏனெனில் சினிமா துறையில் இருந்த அவர் மது, மாது, சூது, புகை பழக்கம் போன்ற எந்த கெட்ட விஷயங்களிலும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளாமல் ஒழுக்கசீலராக வாழ்ந்தவர். அவரது இந்த உயர்ந்த பண்பை பாராட்டதவர்கள் யாருமே இல்லை.

அவரது மூத்த மகன் சூர்யா, இளைய மகன் கார்த்தி இருவருமே தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்து வருகின்றனர். சூர்யா இதுவரை 43 படங்களில் நடித்து முடித்துள்ளார். அதே போல் நடிகர் கார்த்தி 26 படங்களில் நடித்து முடித்திருக்கிறார். இருவரும் தொடர்ந்து பல படங்களில் நடிக்க கமிட் ஆகி பிஸியாக இருந்து வருகின்றனர்.

- Advertisement -

வருகிற 14ம் தேதி சூர்யா இரட்டை வேடத்தில் நடித்துள்ள கங்குவா படம் திரைக்கு வருகிறது. 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். படத்துக்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

கங்குவா படத்தின் டிரெய்லர் நேற்று வெளியான நிலையில் இந்த படத்தில் நடிகர் கார்த்தி கேமியோ ரோலில் நடிப்பது உறுதியாகி உள்ளது. மேலும் கங்குவா 1 பாகம் மட்டுமே வரும் 14ம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில், தொடர்ந்து கங்குவா 2ம் பாகம் அடுத்த ஆண்டில் வெளியாக உள்ளது. இதில் பிரதான வில்லனாக கார்த்தி நடிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

நேற்று வெளியான கங்குவா டிரெய்லரில் கார்த்தி சில காட்சிகளில் வருவது போல் காணப்படுகிறது. அவரது முழு உருவம், முகம் தெரியாவிட்டாலும் அது கார்த்தி தான் என்பதை ரசிகர்கள் உறுதிபடுத்துகின்றனர். மேலும் அந்த காட்சியில் நடிகர் கார்த்தி புகைபிடிப்பது போல காணப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் கார்த்தி புகை பிடிக்கும் காட்சிகளில் நடித்துள்ளார்.

இதுவரை 26 படங்களில் நடித்துள்ள கார்த்தி, மது குடிக்கும் காட்சிகளில் நடித்தாலும் கூட புகை பிடிப்பது போன்ற காட்சியை தவிர்த்து வந்தார். இதை அவர் கொள்கையாக வைத்திருந்த நிலையில், கங்குவா படத்தில் தவிர்க்க முடியாத சூழலில், தன் அண்ணன் படம் என்பதால் தன் கொள்கையை விட்டுக் கொடுத்து சிகரட் பிடிப்பது போல் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. புகை பிடிப்பது உடல் நலத்துக்கு கேடு என்பதால் தன் ரசிகர்களுக்காக கார்த்தி இதை தவிர்த்திருக்கலாம் என்ற விமர்சனம் எழுந்துள்ளது.

- Advertisement -

சற்று முன்